வெளிநாட்டு பிரபலம் இந்திய பெண்ணை திருமணம் செய்யும்போது அந்த விசயம் இணையத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கும். அதுபோன்று சானியா மிர்சா மாலிக் மற்றும் தற்போது ஹசன் அலி ஆகியோர் இந்திய பெண்ணை திருமணம் செய்தது வைரலானது.

அதனை தொடர்ந்து ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் கிளன் மேக்ஸ்வெல் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஆஸ்திரேலியாவில் வசிக்கும் பெண்ணை திருமணம் செய்ய போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி வினி இராமன் என்பவரை மேக்ஸ்வெல் காதலிப்பதாகவும், அவருடன் சேர்ந்து பல நாட்களாக வாழ்வதாகவும், விரைவில் அவரை திருமணம் செய்ய போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேக்ஸ்வெல் உடன் இருக்கும் புகைப்படங்களை விடாமல் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வினி இராமன் பதிவு செய்து வருகிறார். மேலும் எங்கு சென்றாலும் அவருடன் சொல்லும் வினி இராமன் விரைவில் அவரை திருமணம் செய்தால் அடுத்த பரபரப்பான திருமணம் இந்த ஜோடியாகத்தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.