இந்திய அணிக்கு பெரும் சுவராக விளங்கியவர் ராகுல் ட்ராவிட். 11 ஜனவரி 1973 ஆம் ஆண்டு பிறந்த இவர் இந்திய அணியின் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் ஆவார். 2012 ஆம் ஆண்டு இந்திய அணியில் இருந்து ஓய்வு பெற்றார் ராகுல் டிராவிட்.

அதன்பின்னர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக களமிறங்கினர். அனைத்து தரப்பு கிரிக்கெட் போட்டிகளிலும் பல்வேறு சாதனைகள் படைத்துள்ள ராகுல் டிராவிட் தற்போது இந்திய அணியின் பேட்டிங் ஆலோசகர் மற்றும் 19 வயதுக்கு உட்பட இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராகவும் செயல்பட்டு வருகிறார் ராகுல் டிராவிட்.

இவரது குடும்ப வாழ்க்கையை பார்த்தோமேயானால் கடந்த 2003 ஆம் ஆண்டு விஜேதா பெந்தர்கர் என்ற மருத்துவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு சமித் மற்றும் அன்வாய் என இரண்டு மகன்கள் உள்ளனர். இதுவரை பெரிதாக வெளிவராத அவர்களது புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகிவருகிறது. இதோ அவர்களது புகைப்படம்.