நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் டிவி நிகழ்ச்சியான பிக் பாஸின் மூன்றாவது எப்பிசோட், முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த இரண்டு சீசன்களை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் மூன்றாவது சீசனை தொகுத்து வழங்க பலவித கட்டுப்பாடுகளை விதித்தார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிக் பாஸாக இருந்த கமலை, மூன்றாவது சீசன் போட்டியாளர் ஒருவர், ஸ்மால் பாஸாக ட்ரீட் செய்யும் விதத்தில் நடந்துக்கொண்டது, கமலை கடுப்படைய செய்திருக்கிறது.

அவர் வேறு யாருமல்ல, ரசிகர்களின் பேவரைட் பிக் பாஸ் போட்டியாளரான லொஸ்லியா தான். கவினுடன் காதல் கதக்களி விளையாடி வரும் லொஸ்லியா, புத்திசாலித்தனமாக கவினுடன் சேர்ந்த் செயல்பட்டது, நேற்றைய எப்பிசோட்டில் தெரிய வந்தது. அதாவது, தாங்கள் உடன் வைத்திருக்கும் மைக்கின், பேட்டரியை கழட்டி வைத்துவிட்டு, கவின் மற்றும் லொஸ்லியா ரகசியம் பேசியிருக்கிறார்கள். இது பிக் பாஸ் வீட்டில் இருக்கும் கேமரா ஒன்றில் பதிவாகியிருந்தாலும், அவர்கள் என்ன பேசினார்கள் என்பது பதிவாகவில்லை. இதனால், பிக் பாஸ் நிகழ்ச்சி குழுவினர் கடுப்பாகியதோடு, அவர்களது கடுப்பை கமல் மூலம் இன்றைய எப்பிசோட்டில் வெளிப்படுத்தினார்கள்.

இன்றைய நிகழ்ச்சியில் ஒவ்வொருவராக அழைத்து அட்வைஸ் செய்த கமல், லொஸ்லியாவிடம் மட்டும் கொஞ்சம் கராராகவே பேசினார். உங்களுக்கு கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பு வேறு எந்த இலங்கை பெண்ணுக்கும் கிடைக்கவில்லை. அதனால், இதை விளையாட்டாக பார்க்காமல் போடியாக பாருங்கள், உங்கள் மீது ஏராளமானவர்கள் பொறாமை அடைந்திருப்பார்கள், அவர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைத்தால் உங்களை விட நன்றாக செய்திருக்கலாம், என்று கூட நினைக்க தோன்றும், அதனால் சீரியஸாக இருங்கள், என்று வெளுத்து வாங்கிவிட்டார்.

மொத்தத்தில், லொஸ்லியா – கவின் காதலுக்கு சங்கு ஊதிவிட்டார், என்று சொல்லும் அளவுக்கு தான் கமலின் அட்வைஸ் இருந்தது.

ஈழத்தில் இருந்து லொஸ்லியாவின் ஆசிரியரும் பேசியிருந்தார். நாட்டுக்கு வெற்றியுடன் திரும்புங்கள் என்று வாழ்த்து கூறினார்.