பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள என்னை அழைத்தார்கள் நான் நோ சொல்லிட்டேன் கூறியது தர்ஷனின் நெருக்கிய நபர் யார் தெரியுமா பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு அண்மையில் அழைத்தார்கள் என்று நடிகை சனம் ஷெட்டி தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் 3 வீட்டில் இருக்கும் தர்ஷனும், நடிகை சனம் ஷெட்டியும் காதலித்து வருகிறார்கள். டிஆர்பியை ஏற்ற சனம் ஷெட்டியை ஒயில்டு கார்டு என்ட்ரியாக அழைத்து வரக்கூடும் என்று கூறப்பட்டது. ரியல் ஜோடியை தங்க வைத்தால் நிகழ்ச்சி சிறப்பாக இருக்கும் என்று நினைத்தார்கள்.

இந்நிலையில் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சனம் கூறியிருப்பதாவது,

நானும், தர்ஷனும் சேர்ந்து தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விண்ணப்பித்தோம். ஆனால் தர்ஷனை மட்டும் தேர்வு செய்தார்கள். என்னை நிராகரித்துவிட்டார்கள். நிகழ்ச்சி துவங்கி பல நாட்கள் ஆகிய நிலையில் அண்மையில் என்னை கலந்து கொள்ளுமாறு கூறினார்கள்.

தற்போது போட்டியாளராக சென்றால் என்னால் என்ன செய்ய முடியும் என்று தெரியவில்லை. அதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மறுத்துவிட்டேன். பல பெண் போட்டியாளர்கள் அண்மையில் வெளியேற்றப்பட்டார்கள். தர்ஷன் இருப்பதால் தான் என்னை அழைத்தார்கள் என்று நினைக்கிறேன்.

வளர்ந்து வரும் அனைத்து நடிகர்களுக்கும் பிக் பாஸ் ஒரு நல்ல வாய்ப்பு. தர்ஷனின் படம் எதுவும் ரிலீஸாகவில்லை. ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியால் அவர் பிரபலமாகிவிட்டார். கவின், லாஸ்லியா போன்று தர்ஷனும், ஷெரினும் நெருக்கமாக இருப்பதை பார்த்தேன். மற்றவர்களை போன்று எனக்கும் அது பற்றி எதுவும் தெரியவில்லை. இது தர்ஷனின் ஸ்ட்ராடஜி என்று தோன்றவில்லை. எந்த டாஸ்க் கொடுத்தாலும் சிறப்பாக செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் தர்ஷன் அங்கு சென்றுள்ளார்.

தர்ஷன் பற்றி மக்கள் கணித்து வைத்துள்ளது குறித்து அவர் வெளியே வந்த பிறகு தான் கேட்டறிய முடியும். அது வரை காத்திருக்க வேண்டும். உங்களுக்கும், தர்ஷனுக்கும் இடையே காதலா என்று பலர் என்னிடம் கேட்கிறார்கள். தர்ஷன் என்ன நினைக்கிறார் என்று தெரியவில்லை. ரசிகைகளின் கவனத்தை ஈர்க்க தர்ஷன் தான் சிங்கிள் பையன் என்று கூறுகிறார் போன்று என்று சனம் ஷெட்டி தெரிவித்துள்ளார்.