தமிழ்நாட்டின் தென் பகுதியிலிருந்து சென்னை வந்து துணிக்கடையில் வேலை செய்வோரின் வாழ்க்கை அவல நிலையை காட்டி அதில் காதலையும் வைத்திருந்த படம் அங்காடி தெரு.

உன் பேரை சொல்லும் போது உள் நெஞ்சில் கொண்டாட்டம் என இப்பட பாடல் இன்னும் பலரின் மனங்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. வசந்த பாலன் இயக்கத்தில் 2010 ல் வந்த இப்படத்தில் மகேஷ், அஞ்சலி ஜோடி நடிக்க படம் ஹிட்டானது.ஹீரோ மகேஷ்க்கு அதன் பின் படங்கள் பெரியளவில் அமையவில்லை.

தற்போது அவர் தேனாம் பேட்டை மகேஷ் என்ற படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தில் அவர் வாட்டர் கேன் சப்ளை செய்யும் இளைஞராகவும், திருநங்கையாகவும் நடித்துவருகிறாராம்.

அவருடன் படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், இமான் அண்ணாச்சி என பல நடிக்க சித்திக் இயக்கியுள்ளார்.அழகான தோற்றம் கொண்ட திருநங்கையாக மகேஷ் இருக்கும் புகைப்படம் பலரின் கண்களை கவர்ந்துள்ளது.