பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள வனிதா விஜயகுமார் கஸ்தூரி தும்மியது குறித்து கூறிய பொய் பார்வையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரியாக இரண்டு வாரங்களுக்கு முன்பு வந்தார் கஸ்தூரி. அவரை தொடர்ந்து வனிதாவை விருந்தாளியாக அழைத்து, வைல்டு கார்டு என்ட்ரியாக அறிவித்தார் பிக்பாஸ்.

வனிதா வந்த நாள் முதல் பிக்பாஸ் வீடு ரணகளமாகியுள்ளது. பிக்பாஸ் வீடு என்னவோ தனது சொந்த வீடு என்பது போல் அதிகாரம் செலுத்தி வருகிறார் வனிதா.

மேலும் பிக்பாஸ் வீட்டிற்குள் கஸ்தூரி வந்தது வனிதாவுக்கு பிடிக்கவில்லை. வனிதா வந்தது முதல் கஸ்தூரியை நீங்க எதுக்காக வந்தீங்க என்று கேட்டு வெறுப்பேற்றி வருகிறார்.

இந்நிலையில் பள்ளிக்கூட டாஸ்க்கின் போது வனிதாவை வாத்து என்று கூறிவிட்டதாக கஸ்தூரி மீது கொலை வெறியில் உள்ளார் வனிதா. எப்போது வாய்ப்பு கிடைக்கும், அவரை வாங்கலாம் என காத்திருக்கிறார் வனிதா.

இந்நிலையில் நேற்று கிச்சனில் பூண்டு உரித்த கஸ்தூரி தும்மல் வந்ததால் தூரமாக சென்று, கையில் படாதபடி சரியான முறையிலேயே தும்மினார். பின்னர் மீண்டும் பணியை தொடங்கினார் கஸ்தூரி.

இவை முழுவதையும் பார்த்த வனிதா, வேண்டுமென்றே தும்மினால் கையை கழுவுங்கள் என்று கூறுகிறார். ஆனால் கஸ்தூரி நான் கையை பயன்படுத்தவேயில்லை என்றார். உடனே ஹைஜீனிக்கு அப்படி இப்படி என்று கத்திய வனிதா, வெளியே சென்று அப்படியே மாற்றி பேசினார்.

அதாவது கஸ்தூரி அப்படியே தும்மிவிட்டு அப்படியே சமைப்பதாக கூறி மற்ற ஹவுஸ்மேட்ஸ்களை டிவிஸ்ட் செய்கிறார். மேலும் கஸ்தூரி கிச்சனில் இருந்தால் நான் சமைக்க மாட்டேன் என்றும் அவர் கூறி பிரச்சனையை பெரிதுபடுத்துகிறார்.