மதுமிதா பிக் பாஸ் வீட்டில் தற்கொலை முயன்று பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பிக் பாஸ் வீட்டை வந்ததும் கூட அவர் தற்கொலை செய்து கொள்வதாக விஜய் டிவியை மிரட்டியுள்ளார். இது குறித்து விஜய் டிவி தரப்பில் சென்னை கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த புகாரின் பேரில் இன்று மதுமிதாவை போலீசார் விசாரித்ததாக தகவல் வெளியான நிலையில், விஜயின் டிவியின் புகார் குறித்து மதுமிதா முதல் முறையாக பேசியுள்ளார்.

இது குறித்து இன்று விளக்கம் அளித்திருக்கும் மதுமிதா, விஜய் டிவி தன் மீது பொய் புகார் அளித்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதற்கான பாக்கி தொகையை ஒரு குறிப்பிட்ட தேதியில் வழங்குவதாக கூறினார்கள். அதற்கு நானும் சம்மதித்தேன். ஆனால், திடீரென்று என் மீது போலீசில் புகார் அளித்திருக்கிறார்கள். அது ஏன் என்று எனக்கு தெரியவில்லை, என்று மதுமிதா கூறியிருக்கிறார்.

மேலும், இந்த விவகாரத்தில் நடிகர் கமல்ஹாசன் தலையிட்டு இதை சுமூகமாக தீர்த்து வைக்க வேண்டும், என்றும் மதுமிதா விருப்பம் தெரிவித்திருக்கிறார்.