சென்னை: சினிமா நட்சத்திரங்கள் அனைவருக்கும் உள்ள ஒரு ஆசை என்றால் ரஜினி மற்றும் கமலோடு ஒரு காட்சியிலாவது நடிக்க வேண்டும் என்பது தான்.

அந்த வகையில் குழந்தை நட்சத்திரமான பேபி மானஸ்வி, இமைக்கா நொடிகள் படத்தில் லேடி சூப்பர் ஸ்டாரின் மகளாக நடித்த இந்த பேபி ஸ்டார், அவரின் துறுதுறு பேச்சால், அதிரடி நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.

போ போய் சிக்னல்ல பிச்சை எடு என்று அந்த படத்தில் மழலை குரலில் இவர் பேசியது பல மீம்களில் இடம் பிடித்து வைரலானது. இந்த குட்டி வயதில் இப்படி பிரபலமாக இருக்கும் இவர் யார் தெரியுமா? காமெடி நடிகர் கொட்டாச்சியின் மகள்.

இவர் சதுரங்க வேட்டை 2 படத்திலும் நடித்துள்ளார். ஆனால், அந்த படம் இன்னும் வெளிவரவில்லை. இந்நிலையில் பேபி ஸ்டார் மானஸ்வி தர்பார் படத்தில் சூப்பர் ஸ்டாருடன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

அப்பாவை மிஞ்சும் மகளாக மானஸ்வி வளர்ந்துவிட்டார். என்னுடைய மகள் இவ்வளவு பேமஸாவது எனக்கு மிக்க மகிழ்ச்சி என்று கொட்டாச்சியே பல பேட்டியில் கூறியுள்ளார். லேடி சூப்பர் ஸ்டாருடனும் நடிச்சாச்சு, இப்போ சூப்பர் ஸ்டாருடன் நடிக்கப்போறோம் என பேபியும் டேடியும் வெரி ஹேப்பி. அத்தோடு இப் படத்தில் சூப்பர் ஸ்டார், லேடி சூப்பர் ஸ்டார் மற்றும் பேபி ஸ்டார் என பட்டாளமாக கலக்கப் போகின்றனர்.

இப்படித்தான் முன்பு மீனா பேபி ஸ்டாராக ரஜினியுடன் நடித்தார். பின்னர் எஜமான் படத்தில் அவருக்கே ஜோடியாகவும் நடித்து அசத்தினார். பின்னர் ரஜினி படம் ஒன்றில் பசுபதிக்கு ஜோடியாக நடித்து மிரட்டினார் என்பது நினைவிருக்கலாம். மானஸ்வியும் அப்படி வலம் வர வாழ்த்துவோம்.