தமிழில் பொல்லாதலன், வாரணம் ஆயிரம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் திவ்யா. இவர் சினிமாவை தாண்டி அரசியலில் முழு ஈடுபாடு காட்டி வருகிறார்.

தற்போது கன்னட மீடியாக்கள் துபாயில் திவ்யா தனது நீண்டநாள் காதலரான ராபில் என்பவரை ரகசிய திருமணம் செய்துகொண்டதாக செய்திகள் வெளியிட்டுள்ளனர்.

ஆனால் அவரது அம்மா ரஞ்சிதா, இந்த திருமண செய்தியை முற்றிலுமாக மறுத்துள்ளார். இந்தியாவை விட்டு செல்ல விருப்பம் இல்லாததால் திவ்யா காதலரை பிரிந்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.