விஜய்யின் பிகில் படம் இந்த தீபாவளிக்கு பிரம்மாண்ட ரிலீஸ். படத்திற்கான படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது, அதே சமயம் படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது.

இந்த விவரங்களை தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியே அறிவித்திருந்தார். இப்படத்தில் விஜய்யுடன் அதிக காட்சிகள் நடித்துள்ளார் சௌந்தரராஜா, இவர் ஒரு பேட்டியில் பேசும்போது, தெறியை விட இந்த படத்தில் விஜய்யுடன் அதிக காட்சிகள் நடித்துள்ளேன்.

திரையரங்கில் ஒரு விஜய் தோன்றினாலே தெறிக்கும், இந்த படத்தில் இரண்டு விஜய் பல காட்சிகளிலும் வருவார்கள். அதெல்லாம் விஜய் ரசிகர்களுக்கு ஒரு பெரிய விருந்தாக இருக்கும் என்று பேசியுள்ளார்.