பொதுவாக ஒரு திரைப்படத்திற்கு கதையை தயார் செய்யும் போதே படத்தின் தலைப்பு முடிவு செய்துவிடுவது தான் வழக்கம். ஆனால் சமீப காலங்களாக பெயரிடப்படாமல் ஒரு படத்தை இயக்கிவிட்டு இறுதியில் படத்தின் பெயரை வெளியிடுவது ட்ரெண்டாகி வருகிறது. அதை ட்ரெண்ட் என்று சொல்வதைவிட, ஒரு வகை வியாபார யுக்தி என்று சொல்லலாம்.

ஒரு திரைப்படத்திற்கு பெயர் வைக்கவில்லை, பெயர் யோசிக்கவில்லை என ரகசியமாக விளம்பரம் செய்துவிட்டு, அப்படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி பிறகு தலைப்பை அறிவிக்கும் யுக்தி. சண்டியர் விருமாண்டி ஆனதும், ரோபோ எந்திரன் ஆனதும் தெரிந்த கதை. சர்ச்சை ஆகா-மல் பல தமிழ் படங்களுக்கு ஆரம்பத்தில் ஒரு பெயர் முடிவு செய்யப்பட்டு, பிறகு மாற்றம் செய்யபட்டிருக்கின்றன.

அந்த வகையில் ஏஆர்.முருகதாசை ஒரு வித்தியாசமாக சிந்திக்கும் இயக்குனர் என அடையாளப்படுத்திய திரைப்படம் கஜினி. கஜினி மொஹம்மது 17-முறை படையெடுத்த மாதிரி, ரொம்ப கவனமா ஒவ்வொருவரின் பெயரையும் உடல் முழுக்க எழுதிகிட்டு சூர்யா பழிவாங்குன படம். இப்படத்துக்கு முதலில் வைக்கபட்ட பெயர் மிரட்டல்.

அந்த பெயரிலேயே படம் ரீலீஸ் ஆகியிருந்தா டோனி ஜா நடித்த மிரட்டல் அடியோட அடுத்த பார்ட் போல என நம்ம தமிழ் பிள்ளைகள் குழம்பி இருப்பார்கள். சுதாரித்து கொண்ட முருகதாஸ் கஜினின்னு பெயரை மாத்தி காப்பாத்திட்டார் பாஸ்

இதேபோல், 16-வயதினிலே திரைப்படத்திற்கு மயில் என்றும், அச்சம் என்பது மடமையடா திரைப்படத்திற்கு சட்டென்று மாறுது வானிலை எனவும் பெயர் வைக்கபட்டு பிறகு மாற்றப்பட்டது. இதேபோல் உங்களுக்கு தெரிந்த பெயர் மாற்றம் செய்யப்பட்ட படங்களை கமெண்ட்ஸ் பிரிவில் பதிவு செய்யுங்கள்.