தல அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றது.

மேலும், படம் ரிலிஸாகிய அனைத்து இடங்களிலும் இப்படம் லாபத்தை எட்டியுள்ளது, நீண்ட நாட்களாக கேரளாவில் ஹிட் கொடுக்காத அஜித் இந்த படத்தின் மூலம் ஹிட் கொடுத்துள்ளார்.

ஆனால், அதே நேரத்தில் அஜித் UK-வில் பெரிய வசூல் கொடுக்க நீண்ட வருடங்களாக போராடி வருகின்றார்.

அந்த வகையில் நேர்கொண்ட பார்வையும் அந்த பகுதியில் ரூ 90 லட்சம் தான் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும், இது முழுமையான அஜித் படமாக இல்லாதது ஒரு காரணம், தல-60 பொறுத்திருந்து பார்ப்போம் என ரசிகர்களே கூறி வருகின்றனர்.2

சில மாதங்களாகவே, அஜீத்,விஜய் ரசிகர்கள் தங்கள் ஹீரோக்களில் யார் டாப் என்று மோதி மண்டையை உடைத்துக்கொண்டு தற்போது ரெஸ்ட் எடுத்து வரும் நிலையில் ஒரே வருடத்தில் 2 மெகா ஹிட் படங்கள் வசூல் 300 கோடி எங்க தல போல வருமா என்று மீண்டும் அஜீத் ரசிகர்கள் கொடி பிடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

கடந்த பொங்கலுக்கு வெளியான விஸ்வாசம் உடன் வெளியான ரஜினியின் பேட்ட படத்தை துவம்சம் செய்து 100 கோடிக்கும் மேல் வசூல் செய்தது பழைய கதை. அதே அஜீத்துக்கு அடுத்த ஏழாவது மாதத்தில் ரிலீஸான நேர்கொண்ட பார்வையும் தமிழ் சினிமாவின் பல ரெகார்டுகளை முறியடித்து வருகிறது. 8ம் தேதி வெளியான இப்படம் 2 வது வாரத்தைத் தாண்டி சுமார் 75 சதவிகித தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், வெளிநாட்டு வசூல்களையும் சேர்த்து ரூ 200 கோடியை எட்டியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.ஆக இந்த ஒரே ஆண்டில் அஜீத்தின் வசூல் கோட்டை 300 கோடியை எட்டுகிறது.

இந்த சாதனையை ரஜினி தொடங்கி இன்னும் ஒரு நடிகரும் தமிழ் சினிமாவில் நிகழ்த்தியது இல்லை. இனிமேலும் அதற்கான சாத்தியம் குறைவுதான். ஏனெனில் அஜீத்,விஜய்,ரஜினி,கமல் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஒரே ஆண்டில் இரண்டு ரிலீஸ்கள் அமைவதற்கான வாய்ப்பு குறைவு. அப்படியே அமைந்தாலும் அவை ‘விஸ்வாசம்’,’நேர்கொண்டபார்வை’ அளவுக்கு தொடர் சூப்பர் ஹிட்டுகளாக அமைவதற்கு வாய்ப்பு குறைவு. மற்றவர்களை விடுங்கள். அஜீத்துக்கு இனி இப்படி ஒரு டபுள் டமாக்கா ஹிட் அமையுமா தெரியாது.