இந்திய விங் கமண்டோ அபிநந்தனை சித்தரவதை செய்த பாகிஸ்தான் வீரர் சுட்டு கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் புல்வாமா தாக்குதலுக்குக்குபின் பாகிஸ்தான் இராணவத்திடம் இந்திய விங் கமண்டோ அபிநந்தன் சிக்கினார்.

அப்போது, விமானி அபிநந்தனிடம் பாகிஸ்தான் கமாண்டோ அஹமத் கான் விசாரணை நடத்தினார். மேலும், பாகிஸ்தான் வீரர்கள் பல்வேறு வகையில் அவரை சித்ரவதை செய்ததாக தகவல்கள் வெளியாகியது. இதையடுத்து, உலக நாடுகளின் அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், விமானி அபிநந்தனை இந்தியாவிடம் பாகிஸ்தான் ஒப்படைத்தது.

இந்த நிலையில், அபிநந்தனை சித்ரவதைசெய்த பாகிஸ்தான் கமாண்டோ அஹமத் கான், இந்திய ராணுவப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. சர்வதேச எல்லைக்கோட்டுப் பகுதியை ஒட்டிய நாக்யால் என்ற பகுதிக்குள் ஊடுருவ முயன்றபோது, இந்திய ராணுவத்தினர் அவரை சுட்டுக்கொன்றுள்ளனர்.

பாகிஸ்தான் வசம் இந்திய விமானி அபிநந்தன் சிக்கிக்கொண்டபோது, புகைப்படம் ஒன்று வெளியானது. அதில், அபிநந்தனுக்குப் பின்புறமாக அவர் நின்றுகொண்டிருந்தார் என்று ஊடகங்கள் அவரை சுட்டிகாட்டியுள்ளன