தமிழ் சினிமாவில் தற்போது கதாநாயகிகளும் சோலோ கதாநாயகியாக நடித்து வருகின்றனர் அதில் நயன்தாரா மற்றும் த்ரிஷா ஆகியோர் போட்டி போட்டு நடித்து வருகின்றனர்… இருப்பினும் நயன்தாரா நடிப்பில் அறம் போன்ற ஒரு சில திரைப்படங்கள் வெற்றி பெற்றாலும் திரிஷா சோலோவாக நடித்த அனைத்து திரைப்படங்களும் தோல்வியைத் தழுவியது… இருப்பினும் திரிஷா 96 திரைப்படத்திற்கு பிறகு மார்க்கெட்டிலும் விட்ட இடத்தை பிடித்து விட்டார் என்று சொல்ல வேண்டும் காரணம் அனைத்து இளைஞர்களும் 96 படத்திற்கு பிறகு ஜானு என்று தற்போது திரிஷாவை சொல்ல ஆரம்பிக்கும் அளவிற்கு அவருடைய மார்க்கெட் மீண்டும் சூடுபிடித்துள்ளது…

இவர் தற்போது ராங்கி என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார்… இப்படம் கதாநாயகியை மையப்படுத்தி எடுக்கப்படும் திரைப்படம் ஆகும் மேலும் இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் முருகதாஸ் வசனம் எழுதியிருக்கிறார்… இப்படத்தில் நிறைய சண்டை காட்சிகள் பைக் ரேஸ் போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது பைக் ரேஸ் போன்ற காட்சிகளில் த்ரிஷாவிடம் டூப் போடலாம் என்று கேட்டு உள்ளனர் ஆனால் அதற்கு திரிஷா எனக்கு டூப் வேண்டாம் நானே என்னுடைய காட்சியில் நடித்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்… இதைக் கேட்ட படக்குழு நெகிழ்ந்து போய் உள்ளனர் காரணம் தல அஜித் தன்னுடைய திரைப்படங்களில் டூப் போடாமல் சமீபத்திய சண்டை காட்சிகளும் அவரே நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது… இதனால் அஜித்தின் பார்முலாவை திரிஷாவும் தற்போது கடைபிடித்து வருகிறார் மேலும் இது பற்றி உங்கள் கருத்துக்களை கீழே கமெண்ட்டில் தெரிவிக்கவும்…