நடனம் ஆடும் போது கைத்தவறி கீழே விழுந்து நடிகை கோடம்பாக்கத்தில் பரபரப்பு ரியாலிட்டி ஷோ நடனக்காட்சியின் போது தவறி விழுந்த நடிகைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

பிரபல பாலிவுட் நடிகை ஸ்ரத்தா ஆர்யா. இவர் தமிழில் கள்வனின் காதலி, வந்தே மாதரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து ரசிகர்களுக்கு பரிட்சயமாகியுள்ளார். இந்நிலையில் இவர் டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.

அதன்படி ‘நாச் பலியே’ என்ற டிவி ரியாலிட்டி நிகழ்ச்சியில் ஷ்ரத்தா ஆர்யா பங்கேற்றுள்ளார். இதற்கான படப்பிடிப்பில் ஷ்ரத்தா தனது ஆண் நண்பர் ஆலமுடன் நடனம் ஆடினார்.

அப்போது, பேலன்ஸ் இல்லாமல் தனது ஜோடியான ஆலம், ஷ்ரத்தாவை கைதவறி கீழே விட்டுவிட்டதாக தெரிகிறது. தலைகீழாக ஆடும் ஸ்டெப்பின் போது கை நழுவி கீழே விழுந்தார் ஷ்ரத்தா.

இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் வலியில் துடித்த ஷ்ரத்தா படப்பிடிப்பு தளத்திலேயே மயங்கி விழுந்தார். இதனால் படப்பிடிப்பு தளத்தில் இருந்தவர்கள் பதறினர்.

இதைத்தொடர்ந்து அவருக்கு உடனடியாக சிகிச்சையளிக்கப்பட்டது. ஷ்ரத்தா மயக்கம் தெளிந்து எழுந்தார். அவர் மீண்டு எழுந்த பிறகே படப்பிடிப்பு தளத்தில் இருந்தவர்கள் நிம்மதியடைந்தனர்.

இதைத்தொடர்ந்து பேசிய ஷ்ரத்தா ஆர்யா, பெரிய விபத்தில் இருந்து தப்பி இருக்கிறேன். ஆலமின் கை நழுவியதால்தான் கீழே விழுந்து விட்டேன். பயிற்சியில் சரியாகத்தான் ஆடினோம். இருப்பினும் சிறப்பாகதான் ஆடியிருக்கிறோம் என்றார்.