சீமான் இயக்கத்தில் விஜய் நடிக்க இருந்த படம் எது தெரியுமா விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய சட்டப்படிக் குற்றம் படத்தில் சீமானும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதனால் சீமான் விஜய்யை வைத்து படம் இயக்குவார் என உறுதியாக பேசப்பட்டது.

கலைப்புலி எஸ்.தாணு படத்தை தயாரிக்க சம்மதித்தார். ஆனால் தேர்தலுக்கு பிறகு விஜய் இந்த படம் குறித்து பேசுவைதையே தவிர்த்தார். தொடர்ந்து ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், கௌதம் மேனன் என அடுத்தடுத்த படங்களுக்கு கால்ஷீட் கொடுத்தார்.

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் இயக்க இருந்த படம் பகலவன். இப்படத்திற்கான ஸ்க்ரிப்ட் பணிகள் நடந்து கொண்டிருந்தபோதுதான் சீமான் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்தபடியே படத்தின் திரைக்கதையை முழுமையாக முடித்துவிட்ட சீமான், வெளியில் வந்ததும் தனி அலுவலகம் எல்லாம் அமைத்து, அனைத்து படப்பிடிப்புக்கு தயாரான நிலையில், விஜய் விலகிவிட்டார்.

அதன் பிறகு சீமான் இந்தப் படம் குறித்து யாரிடமும் பேசுவதை தவிர்த்து, கட்சி பணிகளில் மும்முரமானார். ஜீவா நடித்தால் நன்றாக இருக்கும் என்று ஒரு முறை சீமான் கூறினார். ஜீவாவும் கதையை கேட்டார். ஆனால் பின்னர் நடிப்பதாக சொல்லிவிட்டார். இப்போது படத்தின் கதையை கேள்விப்பட்ட ஜெயம் ரவி, இந்த கதையில் நான் நடிக்கிறேன். முழு கதையையும் கூறுங்கள் என்று சீமானிடம் கேட்டிருக்கிறார்.

சீமான் – ஜெயம் ரவி இணையும் பகலவன் படத்தை தயாரிக்க போவது கலைப்புலி தாணு தான். விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். பூலோகம், நிமிர்ந்து நில் ஆகிய படங்களை தொடர்ந்து சீமான் இயக்கத்தில் நடித்துவிட்டுத்தான் அண்ணன் ராஜா இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவன படத்தை நடிக்க போவதாகவும் கூறியிருந்தார் ஜெயம்ரவி.

கோவையில் வைத்து 3-மணிநேரம் கதையை கேட்டார் ரவி. கதை சொல்லும் கலையில் சீமான் ஒரு நிபுணர். கிட்டத்தட்ட சினிமாவை நேரில் பார்ப்பது போலவே அவர் சொல்வார். நிச்சயம் நானே நடிக்கிறேன். இப்போது நடித்து கொண்டிருக்கும் 2-படங்கள் முடிந்ததும் அடுத்து ஷூட்டிங்கை ஆரம்பித்துவிடலாம் என்றாராம் ஜெயம்ரவி. ஆனால் இதற்கான அடுத்தகட்ட முயற்சிகள் இதுவரை நடைபெறவில்லை. சீமான் அவர்களும் முழுநேர அரசியல்வாதி ஆகிவிட்டார்.