தொடர்ந்து மூன்று தலைமுறை அத்திவரதரை தரிசனம் செய்த இந்த பாட்டி யார் தெரியுமா வெளிவரும் உண்மை தகவல் இந்தியா முழுவதும் கடந்த ஒரு மாதம் முழுவதும் ஒரே பெயர்தான் அதிகம் உச்சரித்தனர். அவர்தான் அத்திவரதர். அத்திவரதரை காண இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான பக்தர்கள் வந்து சென்றுள்ளனர். இந்நிலையில் அத்திவரதர் கடந்த 1979 ஆம் ஆண்டுக்கு பின் தற்போதுதான் காட்சியளித்துள்ளார். அதாவது 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை அத்திவரதரை வெளியே எடுத்து வணங்குவர். அந்த அளவிற்கு அத்திவரதர் பிரசித்திபெற்ற கடவுள். இந்நிலையில் அத்திவரதரை ஒருமுறை பார்பதற்க்கே பலரும் கூட்ட நெரிசலில் நின்று வணங்கி வருகின்றனர். ஆனால் அத்திவரத்தை மூன்று முறை அதாவது 1939, 1979, 2019 ஆகிய மூன்று தலைமுறைகளாக தரிசித்த பாக்கியத்தை பெற்றவர்தான் ராஜம்மாள். இவர் காஞ்சிபுரத்தை சேந்தவராம்.

சிறுவயதில் அத்திவரதரை தரிசித்த ராஜாம்மாள் இந்த காலகட்டத்தின் கூட்ட நெரிசலை பார்த்து வியந்து போயுள்ளாராம். அதுமட்டுமல்லாமல் ராஜாம்மாலை வீல் சேரில்தான் வைத்து அத்திவரதரை தரிசிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனராம். நாமெல்லாம் ஒரு முறை அத்திவரதரை தரிசிக்க பல மணி நேரம் செலவு செய்கிறோம். ஆனால் மூன்று தலைமுறையும் அத்திவரதரை தரிசித்த பாக்யம் இந்த ராஜாம்மாளிர்க்கே சேரும்.