அஜித்தின் நடிப்பில் கடந்த 8ஆம் தேதி வெளியாகியிருந்த நேர்கொண்ட பார்வை படம் 100 கோடிகளுக்கு மேல் இதுவரை வசூல் செய்து இன்னும் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்தியின் பிங்க் படத்தின் ரீமேக்கான இப்படத்தில் கூடுதலாக சண்டைக்காட்சி ஒன்று சேர்க்கப்பட்டிருந்தது. இந்த சண்டைகாட்சியை தொகுத்து வழங்கிய திலீப் சுப்பராயன் அளித்துள்ள பேட்டியில் பல தகவல்களை பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் கூறுகையில், அஜித் சார் படத்தில் நீண்ட வருடங்களுக்கு பிறகு 10 நிமிடத்திற்கு சண்டைக்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இப்போதெல்லாம் 3,4 நிமிடத்திற்கு மேல் சண்டைக்காட்சி இருந்தாலே ரசிகர்களுக்கு போர் அடித்துவிடுகிறது. அதனால் இந்த சண்டைக்காட்சியை கதையுடன் நகர்த்த திட்டமிட்டோம். இந்த காட்சிகளில் வரும் ராடு, பின்னால் தண்ணீர் பீய்த்து அடிப்பது எல்லாம் வினோத்தின் ஐடியா தான்.

இந்த 10 நிமிட காட்சி மட்டும் 12 நாட்கள் எடுக்கப்பட்டன. மாலை 6 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 2 மணி வரை ஷூட்டிங் நடைபெற்றது. அஜித் சார் தான்… பைக்க அவ்வளவு வேகமா ஓட்டினார். 120ல் போனால் எப்படி காட்சியை பிடிப்பது. இப்படி திரும்பி பார்ப்பதற்குள் கடந்துவிடுவார் என கூறினார்.