மிக பிரம்மாண்ட கூட்டணி உடன் வெப் சீரிஸ் பக்கம் செல்லும் வெங்கட் பிரபு வெளிவரும் உண்மை தகவல் இதோ

வெங்கட் பிரபு தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்தவர். இவர் இயக்கத்தில் விரைவில் பார்ட்டி படம் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் அடுத்து இவர் மாநாடு இயக்குவதாக இருந்து பின் படம் நிறுத்தப்பட்டது, அதை தொடர்ந்து அஜித்தை சந்தித்து சில கதை விவாதங்களில் ஈடுப்பட்டுள்ளார்.

இதை நம் தளத்திலேயே கூறியிருந்தோம், தற்போது வெங்கட்பிரபு ஒரு வெப் சீரிஸ் எடுக்கும் ப்ளானில் உள்ளாராம்.

இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க, இதில் காஜல் அகர்வால், கயல் ஆனந்தி, வைபவ் என பல நட்சத்திரங்கள் நடிக்கவுள்ளனர்.

40 நாளில் இந்த வெப் சீரிஸை முடிக்க வெங்கட் பிரபு ப்ளான் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.