லாபத்தை நோக்கி செல்லும் நேர்கொண்ட பார்வை 9 நாட்கள் முடிவில் தமிழகத்தின் மொத்த வசூல் இது தான் நேர்கொண்ட பார்வை தல அஜித் நடிப்பில் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் இரண்டு வாரம் ஆகியும் கோமாளி படம் வந்தும் நன்றாக தான் ஓடி வருகின்றது.

இந்நிலையில் நேர்கொண்ட பார்வை படம் வெளிவந்து 9 நாட்கள் ஆகிய நிலையில் இப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ 62 கோடி வரை வசூல் செய்துள்ளது.

இப்படம் இன்றே அனைத்து விநியோகஸ்தர்களுக்கும் போட்ட பணத்தை கொடுத்துவிடும் என கூறப்படுகின்றது.

மேலும், இதை தொடர்ந்து வரும் வசூல் அனைத்துமே லாபம் தான், இதன் மூலம் தல அஜித் ஒரே வருடத்தில் இரண்டு ஹிட் படங்களை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.