நகைச்சுவை நடிகா் எம். எஸ். பாஸ்கர் என்ற பெயர் வேண்டுமானால் அனைவருக்கும் தெரியாமல் இருக்கலாம் ஆனால் ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ “பட்டாபி” என்று சொன்னால் தமிழ்நாட்டில் தெரியாமல் இருக்காது. ஆரம்ப காலங்களில் சில மேடை நாடகங்களிலும் சில தொலைக்காட்சி நாடகங்களிலும் நடித்தவர். பின்னர் பல வேற்று மொழி படங்களுக்கு பின்னணி குரல் நடிகராகவும் பணிபுரிந்தவர்.

அவ்வப்போது சிறு சிறு வேடங்களிலும் நகைச்சுவை நடிகராகவும் இவரை காண முடியும்.2007ஆம் ஆண்டு வெளிவந்த ‘மொழி’ திரைப்படம் இவருக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. ஒரு நகைச்சுவை நடிகருக்குள் இவ்வளவு திறமையா என்று பேசாதவர் யாரும் இல்லை. அனால் அந்த படத்துக்காக அவருக்கு எந்த ஒரு விருதும் பாராட்டும் கிடைக்காமல் போனது மிகவும் வருந்தத்தக்கது.

கடைசியாக அவரை 2017ஆம் ஆண்டு வெளியான ‘எட்டு தோட்டாக்கள்‘ படத்தில் “கிருஷ்ணமூர்த்தி” என்ற கதாபாத்திரத்தில் தான் மிகவும் ரசித்தேன். நியாயத்திற்கு அந்த படத்துக்காக அவர் ஆஸ்கார் விருதே பெற்றிருக்க வேண்டும். அனால் பாவம் அவர் பிறந்தது தமிழ்நாடு ஆயிற்றே. பிலிம்பேர் விருது கூட கிடைக்கவில்லை.

அந்த படத்தில் அவர் ஏற்று நடித்தது என்னவோ வில்லன் கதாபாத்திரமாக இருக்கலாம் அனால் என்னை பொறுத்தவரையில் அவர் தான் அந்த படத்தின் நடிகா். தற்போது அவரின் மகன் ஆதித்யா ‘96‘ படம் மூலமாக அறிமுகமாகி பல விருதுகளை முதல் படத்திலேயே வாங்கி குவித்து வருகிறார்