தமிழகத்தின் இரண்டு முக்கிய தலைவர்கள் மறைவை தொடர்ந்து அரசியலில் வெற்றிடம் ஏற்ற்பட்டுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. இவர் தான் அடுத்த முதல்வர் என்று பொதுமக்கள் இன்னும் யாரையும் ஏற்றுக்கொள்ள முன் வரவில்லை.

கலைஞரா..? அம்மா.? என்று இருந்த கேள்வி இப்போது இல்லை என்பது தான் அதற்கு காரணம். ஒரு பக்கம் தொடர்ந்து குடும்ப அரசியல் செய்து வருவதால் சொந்த கட்சியினரிடமே எதிர்ப்பை சம்பாதிதுள்ள கட்சி, இன்னொரு பக்கம் இரண்டாக பிரிந்தது மட்டுமில்லாமல் இரட்டை தலைமையை கொண்டு ஆட்சி நடத்தி வரும் ஒரு கட்சி என தமிழக அரசியல் களம் கொஞ்சம் தள்ளாடி கொண்டு தான் இருக்கின்றது.

இதற்கிடையில், நான் யார் பக்கமும் இல்லை மய்யத்தில் தான் நிற்பேன் என ஒரு நடிகர் கட்சியை ஆரம்பித்து விட்டு இஸ்லாமியர்கள் கூடியிருந்த இடத்தில் இந்து மதம் குறித்து ஆட்சேபனைக்குரிய விஷயத்தை பேசி பெரும்பாலான இந்துக்களின் வெறுப்பை சம்பாத்தித்து கொண்டார் நடிகர் கமல்ஹாசன். இது தான் உங்கள் மய்யத்தின் மையமா..? என்று கேள்வி எழுப்புகிறார்கள் பொதுமக்கள்

ஆனால், அரசியலுக்கு வருகிறேன்.. வந்துட்டேன்.. வந்துட்டே இருக்கேன்.. வந்துருவேன் என்று கண்ணாமூச்சி ஆட்டம் காட்டிக்கொண்டிருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ஆனால், தனது மன்றத்தை வழுப்படுத்தும் பணிகளை கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து செய்து வருகிறார்.

இந்நிலையில், தமிழக அரசியல் களத்தை புரட்டி போடும் படியான ஒரு தகவல் பரவி வருகின்றது. 2021 தேர்தலில் அதிமுக + ரஜினி + பாஜக என்ற அதிரடி கூட்டணி பற்றிய தகவல் தான் இது. இதனால், எதிர்கட்சிகள் அலறிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், இந்த கூட்டணியில் யார் முதல்வர் வேட்பாளர் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

இன்னும் இரண்டு வருடங்கள் உள்ள நிலையில் அதற்க்கான முடிவு சுமூகமாக எட்டப்படும் என்றே தெரிகின்றது. இந்த தகவல் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்து வருகிறது. இந்த கூட்டணி அமையும் போது ரஜினி தான் முதல்வர் வேட்பாளராக இருக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறுகிறார்கள்.

அரசியல் நுழைந்தே ஆக வேண்டும். முதல்வர் ஆகியே தீர வேண்டும் என்று இருக்கும் ரஜினியின் ஜாதகம் இதனால் பலிதமாகும் என்றே பலரும் கூறுகிறார்கள். என்ன நடக்கபோகிறது..? என்பதை பொறுத்திருந்தான் பார்க்கவேண்டும்.