தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை நேர்கொண்ட பார்வையின் வசூல் எவ்வளவு தெரியுமா வெளியான உண்மை தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் முதல் முறையாக எச். வினோத் இயக்கத்தில் உருவாகி இருந்த திரைப்படம் நேர்கொண்ட பார்வை.

ஹிந்தியில் வெளியாகி தேசிய விருது பெற்ற பிங்க் படத்தின் அதிகாரபூர்வ ரீமேக் திரைப்படமாக உருவாகி இருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் தொடர்ந்து விடுமுறை நாட்களாக அமைந்ததால் நல்ல வசூலே கிடைத்து வருகிறது.

இதுவரை இப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ 55 கோடி வரை வசூல் செய்துள்ளது. மேலும் இன்றும் விடுமுறை நாள் என்பதால் இப்படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும்.

இந்த வார இறுதிக்குள் எப்படியும் ரூ 65 கோடியை கிராஸ் செய்து விடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

உலகம் முழுவதும் சேர்ந்து இப்படத்தின் வசூல் ரூ 100 கோடியை தாண்டி விட்டது ரசிகர்கள் மததியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.