சென்னை: நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து அத்திரவரதரை தரிசனம் செய்தார்.

காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் அத்திரவரதரை பொது மக்களும், பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் கடந்த மாதம் 1ம் தேதியில் இருந்து தரிசனம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

அத்திரவரதரை தரிசனம் செய்ய இன்றே கடைசி நாள் ஆகும். இந்நிலையில் நயன்தாரா தனது காதலரான இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் சென்று அத்திவரதரை தரிசனம் செய்தார்.

அத்திரவரதரின் படமும், பிரசாதமும் நயன்தாராவிடம் கொடுக்கப்பட்டது. நயன்தாரா அத்திரவரதரை தரிசிக்க வந்ததை பார்த்த பக்தர்கள் ஆளாளுக்கு அவரை செல்போனில் புகைப்படம் எடுத்தனர்.

நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் இந்த ஆண்டு திருமணம் செய்து கொள்ளக்கூடும் என்று கூறப்படுகிறது. நயன்தாராவை சீக்கிரமாக மனைவி ஆக்கிக்கொள்ளுங்கள் அன்பான இயக்குநரே என்று ரசிகர்கள் விக்னேஷ் சிவனுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

நயன்தாரா நடிப்பில் இந்த ஆண்டு விஸ்வாசம், ஐரா, மிஸ்டர் லோக்கல், கொலையுதிர் காலம் ஆகிய நான்கு படங்கள் இதுவரை வெளியாகியுள்ளன. அதில் விஸ்வாசம் மட்டுமே ஹிட்டாகியுள்ளது. நயன்தாரா ரஜினியுடன் சேர்ந்து தர்பார், விஜய்யுடன் பிகில், சிரஞ்சீவியுடன் சயீரா நரசிம்ம ரெட்டி ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.

நயன்தாராவின் கெரியர் கொஞ்சம் மந்தமாகத் துவங்கியுள்ள நேரத்தில் அவர் தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கப் போகிறாராம். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. விக்னேஷ் சிவன் சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்க தயாராகிக் கொண்டிருக்கிறார்.

முன்னதாக ரஜினிகாந்த் தனது மனைவி லதாவுடன் நள்ளிரவில் அத்திவரதரை சிறப்பு தரிசனம் செய்தார். த்ரிஷாவும் அத்திவரதரை தரிசனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.