நியூயார்க்: பாடகி மைலி சைரஸ், நடிகர் லியாம் ஹெம்ஸ்வொர்த் ஆகியோர் பிரிந்த பிறகு ஒருவர் மீது மற்றொருவர் புகார் தெரிவித்து கொண்டிருக்கிறார்கள்.

அமெரிக்க பாடகி மைலி சைரஸும், அவரின் காதல் கணவரும், நடிகருமான லியாம் ஹெம்ஸ்வொர்த்தும் பிரிவதாக அறிவிப்பு வெளியிட்டனர். பிரிந்து சென்றாலும் செல்லப் பிராணிகளுக்காக நண்பர்களாக இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஒருவர் மீது மற்றொருவர் புகார் தெரிவிக்கத் துவங்கியுள்ளனர். லியாம் ஹெம்ஸ்வொர்த்துக்கு குடிப்பழக்கம் இருப்பதுடன், அவர் போதைப்பொருள் பயன்படுத்துவதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்று மைலி தெரிவித்துள்ளார். ஆனால் மைலியின் குற்றச்சாட்டை ஏற்க மறுத்துள்ளார் லியாம்.
மைலிக்கு கள்ளத்தொடர்பு இருந்ததால் தான் நாங்கள் பிரிந்தோம் என்கிறார் லியாம் ஹெம்ஸ்வொர்த். ஆனால் மைலி தரப்போ, அவர் யாருடனும் கள்ளத்தொடர்பு வைக்கவில்லை என்று தெரிவித்துள்ளது.

கணவரை பிரிந்த மறுநாளே மைலி சைரஸ் ரியாலிட்டி ஸ்டாரான கெய்ட்லின் கார்டருக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்த புகைப்படங்கள் வெளியாகின. அதை பார்த்த லியாம் ஹெம்ஸ்வொர்த் மனமுடைந்து போய்விட்டாராம்.

மைலியும், கணவரை பிரிந்த கெய்ட்லினும் ஒன்று சேர்ந்துள்ளதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்று அவர்களுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

மைலி சைரஸுக்கு நெருக்கமான ஒருவர் கூறியதாவது,

மைலி சைரஸ் தான் பிரச்சனை பார்ட்டி, லியாம் ரொம்ப நல்லவர், மெச்சூரனாவர், அமைதியானவர் என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது தான் இல்லை. லியாம் ஓவராக பார்ட்டிகளுக்கு செல்வார். அதை மைலி கண்டித்தது அவருக்கு பிடிக்கவில்லை என்றார்.

லியாம் ஹெம்ஸ்வொர்த்தாவது குடிக்கு அடிமையாக இருப்பதாவது, மைலி தரப்பு சொல்வது எல்லாம் பொய் என்று லியாம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.