தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ், இதுவரை தென்னிந்திய சினிமாவில் பல்வேறு முன்னணி ஹீரோக்களுடன் நடித்திருந்தாலும் இவரை பற்றிய மீம்களை நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பி வந்த வண்ணம் உள்ளனர்.தற்போது இவர் தமிழ் சினிமாவில் தற்போது நடிப்பதை தவிர்த்து வருகிறார்.

திரைப்பங்கள்

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிகர் விஷுலுடம் சண்டக்கோழி, விஜயுடன் ‘சர்கார்’ என்று தொடர்ந்து இரண்டு படங்கள் வெளியானாலும், இரண்டு படத்திலும் அம்மணியை கலாய்த்து பல கிண்டலான புகைப்படங்கள் வெளிவரவே கடும் சோகத்தில் ஆழ்ந்தார் கீர்த்தி. ஆனால், இவருக்கு தெம்பூட்டும் விதமாக இவர் நடித்த மகாநதி திரைப்படதிற்காக கீர்த்தி சுரேஷிற்கு தேசிய விருது கிடைத்தது.

பேட்டி

நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் பிரபல நகைக்கடையை திறந்து வைக்க சென்றபோது ஒரு ரசிகர் பார்சலைகொடுத்துள்ளார். அதை திறந்தபோது கீர்த்தி சுரேஷின் படங்கள் அடங்கிய ஆல்பம் ஒன்றும் அதில் அவரை காதலிக்கிறேன் என்று அந்த நபர் எழுதியிருந்த ஒரு கடிதமும் இருந்ததுள்ளது. அதனை பார்த்துள்ள கீர்த்தி கல்லூரியில் படிக்கும் நாட்களில் யாரும் காதல் கடிதம் தரவில்லை. இது முதல் காதல் கடிதம் என்பதால் பத்திரமாக வைத்து கொண்டாராம். இதனை பேட்டி ஒன்றில் அவரே கூறியுள்ளார்