எழுதி கொடுத்து நடிப்பது போல் நடப்பது எப்படி..?மக்களை ஏமாற்றுகிறதா பிக்பாஸ்! வெளிவரும் உண்மை

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது மிக பல மொழிகளில் நடத்தப்பட்டு வருகிறது. ஹிந்தி, கன்னடத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், மராத்தியில் தொடங்கப்பட்டது.

ஆனால் தமிழ் பிக்பாஸ் தான் முன் உதாரணமாக இருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது. அதிலும் இதுவரை கடந்த இரண்டு சீசன்களிலும் இல்லாதளவில் வெளியே எவிக்ட் ஆகி சென்ற போட்டியாளர் (வனிதா) ஐ மீண்டும் அழைத்து வந்தது இந்த சீசனில் முதல் முறை.

ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சி கண்டெண்ட் ஸ்கிரிப்ட் என சொல்லப்பட்டு வருகிறது. வனிதாவை அழைத்து வந்தது கண்டெண்ட்க்கு ஆக தான் என சொல்லப்பட்டு வருகிறது.

இங்கு தான் இப்படியா என பார்த்தால் தெலுங்கில் கடந்த சீசனில் மக்கள் வெளியேற்றிய ஒரு போட்டியாளரை Wild Card சுற்று மூலம் மீண்டும் அழைத்து வந்துள்ளனர்.

அது போல தற்போது நடைபெற்று வரும் மராத்தி பிக்பாஸ் சீசன் 2 ல் கடந்த சீசன் வெற்றியாளர் Megha Dhade, Sushant Shelar, Resham Tipnis ஆகியோர் தற்போது உள்ளே அழைத்துவந்துள்ளனர்.

இதனால் வழக்கம் போல பிக்பாஸ் எதிர்ப்பாளர்கள் இதெல்லாம் மக்களை திசை திருப்பும் முயற்சி, நிகழ்ச்சியை பார்க்க வைக்கும் யுத்தி என அனைவரும் கூறிவருகிறார்கள்.