கூட்டாக சேர்ந்து வீடு வாங்கும் பிரபாஸ் அனுஷ்கா அதுவும் எந்த நாட்டில் தெரியுமா ஹைதராபாத்: பிரபாஸும், அனுஷ்காவும் சேர்ந்து அமெரிக்காவில் வீடு வாங்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார்களாம்.

பாகுபலி படத்தில் நடித்தபோது பிரபாஸ், அனுஷ்கா இடையே காதல் ஏற்பட்டதாக பேச்சு கிளம்பியது. அனுஷ்கா என் குடும்ப நண்பர், அதை தவிர வேறு எதுவும் இல்லை என்று பிரபாஸ் பலமுறை கூறியும் யாரும் நம்பத் தயாராக இல்லை.

இந்நிலையில் தான் அவர்களை பற்றி புது தகவல் ஒன்று தீயாக பரவியுள்ளது.

பிரபாஸும், அனுஷ்காவும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வீடு வாங்கும் வேலையில் இறங்கியுள்ளார்களாம். அதாவது கூட்டாக சேர்ந்து வீடு வாங்குகிறார்களாம். இந்த தகவலை கேட்டு அனுஷ்கா ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். பிரபாஸும், அனுஷ்காவும் நிஜத்திலும் ஒன்று சேர வேண்டும் என்பது தான் அவர்களின் நீண்ட நாள் ஆசை.

அண்மையில் பேட்டி ஒன்றில் பிரபாஸிடம் அனுஷ்கா பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது, நானும், அனுஷ்காவும் நல்ல நண்பர்கள். நாங்கள் காதலிப்பதாக இருந்தால் கடந்த 2 ஆண்டுகளில் எங்களை ஒரு இடத்தில் கூட யாரும் ஏன் ஜோடியாக பார்க்கவில்லை. காதல் எதுவும் இல்லை என்று நானும் பலமுறை கூறிவிட்டேன் என்றார்.

பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹார் நடத்தும் காபி வித் கரண் நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டபோதும் அனுஷ்காவுடன் காதலா என்று கேட்கப்பட்டது. எனக்கு பதிலாக இயக்குநர் ராஜமவுலி மற்றும் ராணாவை பதில் அளிக்குமாறு கூறினேன். எனக்கும், அனுஷ்காவுக்கும் இடையே ஒன்றும் இல்லை என்று அவர்களும் தெரிவித்தார்கள். நான் அவர்களை அப்படி சொல்லும்படி கூறவில்லை என்று பிரபாஸ் தெரிவித்தார்.

பிரபாஸ் நடித்துள்ள சாஹோ படம் வரும் 30ம் தேதி ரிலீஸாக உள்ளது. அந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சியின்போது நீங்கள் யாரையாவது காதலிக்கிறீர்களா என்று பிரபாஸிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம் என்று கூறி ரசிகர்களை குழம்ப வைத்துவிட்டார். இதற்கிடையே பிரபாஸுக்கு வீட்டில் பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. சாஹோ ரிலீஸுக்கு பிறகு பிரபாஸ் திருமணம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.