மேற்கிந்திய தீவு அணியின் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் ஓய்வு :மைதானத்தை விட்டு வெளியேறும் போது கெய்ல் செய்த செயல் இணையத்தில் வைரல் மேற்கிந்திய தீவு அணியின் அதிரடி ஆட்டக்காரரான கிறிஸ் கெய்ல் இன்றைய போட்டியோடு ஓய்வு பெறப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, மேற்கிந்திய தீவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அங்கு டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில் டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிவிட்டதால், இரு அணிகளுக்கிடையேயான ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் இன்று 3-வது ஒருநாள் போட்டி டிரினிடாட் போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.

அதன் படி முதலில் ஆடி வரும் மேற்கிந்திய தீவு அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகிறது. இப்போட்டியில் துவக்க வீரரான ஜெர்சி, எப்போதும் தன்னுடைய 45 எண் பொறித்த ஜெர்சிக்கு பதிலாக, 301 என்ற எண் பொறித்த ஜெர்சியுடன் விளையாடினார்.

இன்றைய போட்டி அவருக்கு 301-வது ஒருநாள் போட்டி ஆகும், இதனால் அவர் இன்றோடு ஓய்வு பெறுவார் என்று கூறப்படுகிறது.

மேலும் இன்றைய போட்டியில் 41 பந்தில் 8 பவுண்டரி, 5 சிக்சருடன் 72 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்து வெளியேறும்போது இந்திய வீரர்கள் வாழ்த்து தெரிவித்தனர். குறிப்பாக கோஹ்லி மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் அவருடன் ஆட்டம் போட்டனர்.