நடிகை ஆண்ட்ரியா விவகாரத்தில் இரண்டு நடிகர்களின் பெயர்கள் அடிபடுகின்றன.
சென்னை: ஆண்ட்ரியாவை உடல் மற்றும் மனரீதியாக கொடுமைப்படுத்தியது இந்த நடிகர் தான் என இரண்டு நடிகர்களின் பெயர் சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

திருமணமானவருடன் வைத்திருந்த தகாத உறவால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பெரும் பாதிப்புகளைச் சந்தித்ததாகக் கூறி சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார் நடிகை ஆண்ட்ரியா. இது தொடர்பாக அவர் முறிந்த சிறகுகள் என்ற பெயரில் புத்தகம் ஒன்றையும் எழுதி இருக்கிறார்.

பெங்களூருவில் நடந்த விழா ஒன்றில் தான் முதன்முறையாக தனது மன அழுத்தம் பற்றி வெளியில் கூறினார் ஆண்ட்ரியா. ஆனால், தன்னை ஏமாற்றியவர் யார் என்ற தகவலை வெளிப்படுத்த அவர் மறுத்து விட்டார். தனது புத்தகத்தில் தனது வேதனைகளை கொட்டியிருப்பதாக மட்டும் கூறினார்.

திருமணமானவருடன் கொண்டிருந்த தகாத உறவினால், மன அழுத்தம் வரை சென்ற ஆண்ட்ரியா, அதற்காக சிகிச்சை எடுத்துக் கொண்டதாகவும் தெரிவித்திருந்திருந்தார். நல்ல பாடகி, அழகான திறமையான நடிகை, தேர்ந்தெடுத்து நல்ல படங்களில் மட்டுமே நடிப்பார் என தமிழ் சினிமாவில் நல்ல பெயரைப் பெற்றிருந்த ஆண்ட்ரியாவை இந்த நிலைக்கு தள்ளி விட்டது யார் என நமக்குத் தெரிந்த வட்டாரத்தில் விசாரித்தோம்.

ஆனால் இடையில் என்ன நடந்தது எனத் தெரியவில்லை. இருவரும் அதிரடியாக பிரிந்தனர். பின்னர் நடிகை வேறொரு நடிகரை காதலித்து, அவருக்கு மனைவியாகி விட்டார். சமீபத்தில் இந்த நடிகருடன் ஒரு படத்தில் ஆண்ட்ரியா நடித்திருந்தார். எனவே அப்போது ஏற்பட்ட பழக்கம் தான், காதலாகி இருக்கக்கூடும் என்கிறார்கள்.

இதே போல், சந்தேகிக்கப்படும் மற்றொரு நடிகர், ரொம்பவே பெரிய இடம். அவருடனும் கடைசியாக ஆண்ட்ரியா ஒரு படத்தில் நடித்திருந்தார். அப்போது தான் இருவரும் ஒன்றாக சுற்றியதாக கூறப்படுகிறது. ஏமாற்றியவர் பெரிய இடம் என்பதால் தான் பெயரைக் கூட குறிப்பிட ஆண்ட்ரியா பயப்படுகிறார் என்கிறார்கள்.

திரையில் தன்னை போல்டான பெண்ணாக காட்டிக் கொள்ளும் ஆண்ட்ரியா, நிஜத்தில் ஏன் இப்படி பின் வாங்குகிறார் என்பது தான் பலரது சந்தேகமே. சரி, கத்தரிக்காய் முத்தினால் கடைத்தெருவுக்கு வந்து தானே ஆக வேண்டும். எனவே, நிச்சயம் ஒரு நாள் ஆண்ட்ரியாவே தன்னை ஏமாற்றியவர் யார் என்பதை அறிவிப்பார் என எதிர்பார்க்கலாம்.