ஒரு வழியாக பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய சாக்‌ஷி :இறுதிவரை செல்லும் போட்டியாளர்கள் இவர்கள் தான் வெளிவரும் உண்மை

பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக 50வது நாளை நெருங்கிவிட்டது. இதுவரை ஆறு போட்டியாளர்கள் வெளியேறியிருந்த நிலையில், கடந்த வார நாமினேஷனில் சாக்‌ஷி, லொஸ்லியா, அபிராமி நாமினேட் ஆனார்கள்.

இந்நிலையில் அனைவரும் நாமினேஷனில் கண்டிப்பாக சாக்‌ஷி தான் வெளியேறுவார் என்று எதிர்பார்த்த நிலையில், நம்பகரமாக வந்த தகவலின் படி சாக்‌ஷி இந்த வாரம் வெளியேற்றியுள்ளாராம். இந்த முறையும் ரகசிய அறையில் வைக்கப்படவில்லையாம்.

மேலும், பல பிரச்சனைகளுக்கு சொந்தக்காரர் சாக்ஷி. கவின், லொஸ்லியா நட்பை கொச்சைப்படுத்தியது மட்டுமன்றி கவினை பயங்கரமாக டார்ச்சர் செய்தவர் சாக்ஷி. கவினை மட்டுமின்றி பிக்பாஸ் வீட்டில் உள்ள சக போட்டியாளர்கள் அனைவரையும் அவர் விட்டுவைக்கவில்லை. எனவே அவர் மீது கடுப்பாகி வந்த பார்வையாளர்கள் அவரை வெளியேற்றும் முடிவை எடுத்து அவருக்கு குறைவான வாக்குகளை அளித்து வந்தனர்

ஆனால் மீராமிதுன் வாண்ட்டட் ஆக வந்து சிக்கிக் கொண்டதால் அவர் முதலில் வெளியேறும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனை அடைந்து பிக் பாஸ் முயற்சியால் மீண்டும் சாக்சி காப்பாற்றப்பட்டு ரேஷ்மா வெளியேற்றப்பட்டார். ஆனால் ஒரு அளவுக்கு மேல் பிக்பாஸால் கூட சாக்ஷியை காப்பாற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் இந்த வாரம் சாக்‌ஷி வெளியேறுகிறார்.

சாக்ஷி வெளியேறுவதால் பெரிய நிம்மதி அனேகமாக கவினுக்குத்தான் இருக்கும். கவின், லொஸ்லிய உறவு இனிமேல் எப்படி செல்லும்? அந்த உறவை நீட்டிக்க கஸ்தூரி விடுவாரா? போன்ற பல கேள்விகள் எழுந்துள்ள நிலையில் இப்போதைக்கு ஒரு சிறு ஆறுதலாக சாக்ஷி வெளியேறுவது கவினுக்கு இருக்கும் என்பது மட்டும் உண்மை

மேலும் இன்றைய நிகழ்ச்சியில் சில ஹைலைட்ஸ் தற்போது வெளியாகியுள்ளது. அதில் போட்டியாளர்கள் டாப் 3 யார் இறுதி வரை செல்வார்கள் என்பதற்கு தர்ஷன், சாண்டி, லொஸ்லியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

பிக்பாஸில் கடந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்ட ரேஷ்மா மற்றும் காரணமே இன்றி வெளியேற்றப்பட்ட சரவணனை தொடர்ந்து தற்போது சாக்‌ஷியும் எலிமினேட் செய்யப்பட்டுள்ளார்.

ரேஷ்மா வெளியேறிய வாரத்திலேயே சாக்‌ஷி தான் எலிமினேட் என கூறப்பட்டு வந்தது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக ரேஷ்மா வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் சாக்‌ஷியின் குழந்தை பருவ புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. தற்போதுள்ள அதே சிரிப்புடன் சாக்‌ஷியின் அந்த குழந்தை பருவ புகைப்படம் இதோ…