மேற்கிந்திய தீவு அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் நடுவரை ஜடேஜா முரைத்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, மேற்கிந்திய தீவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அங்கு டி20, ஒருநாள் தொடர் மற்றும் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில் டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிய நிலையில், இரு அணிகளுக்கிடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று கியூன்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. அதன் படி முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 279 ஓட்டங்கள் எடுத்தது.

அதன் பின் ஆடிய மேற்கிந்திய தீவு அணி 42 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 2010 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து 59 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் இப்போட்டியின் கடைசி ஓவரை இந்திய அணி வீரர் ஜடேஜா எதிர்த்து ஆடினார். அப்போது அந்த ஓவரின் 3-வது பந்து அகலப்பந்தாக செல்ல, ஆனால் நடுவர் கொடுக்க தாமதம் செய்ததால், உடனே ஜடேஜா நடுவரை முறைக்க, அதன் பின் நடுவர் உடனடியாக அகலப்பந்து கொடுத்தார்.

ஜடேஜா முறைத்ததை பார்த்தவுடன் நடுவர் பயந்து போய் அகலப்பந்து கொடுத்துவிட்டதாக, இந்திய ரசிகர்கள் அந்த வீடியோவை தற்போது வைரலாக்கி வருகின்றனர்.