அது என்ன பிக் பாஸ் சரவணனுக்கு மட்டும் ஏன் ஓரவஞ்சனை :இதுக்கு கமலும் உடந்தையா வெளிவரும் உண்மை தகவல் இதோ சரவணன் பற்றி கமல் இந்த வாரம் பேசாதது அவரது ரசிகர்களை அதிருப்திக்கு உள்ளாக்கி இருக்கிறது.
சென்னை: சரவணன் ஏன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் என்ற உண்மையை கமல் இந்த வாரம் சொல்லாதது மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அகம் டிவி வழியே கமல் பேசிக் கொண்டிருந்த போது, ‘தானும் பேருந்தில் பயணிக்கும் போது பெண்களைத் தவறாக இடித்துள்ளேன்’ எனக் கூறினார் சரவணன். இந்த விவகாரம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது.

சமூகவலைதளங்களில் இது தொடர்பாக கடும் விவாதங்கள் எழுந்தன. பிக் பாஸும் சரவணனை அழைத்து நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வைத்தார். ஆனாலும் இந்தப் பிரச்சினை ஓயவில்லை.

இதனால் கடந்த வாரம் அதிரடியாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார் சரவணன். சக போட்டியாளர்களுக்குக்கூட தெரியாமல் அவர் கன்பெக்‌ஷன் ரூம் வழியாகவே கண்ணைக் கட்டி அழைத்துச் செல்லப்பட்டார். இந்த சம்பவத்தால், அதுவரை சரவணனுக்கு எதிராகப் பேசிக் கொண்டிருந்தவர்கள் கூட அவருக்கு ஆதரவாக மாறினர்.

சரவணனை பிக் பாஸ் அவமானப் படுத்தி விட்டார் என்ற விமர்சனம் எழுந்தது. மீண்டும் சரவணனை பிக் பாஸ் வீட்டிற்குள் அழைத்து வர வேண்டும் என்ற கோரிக்கையும் வலுவானது. பிக் பாஸ் வீட்டிற்குள்ளும் சரவணனின் வெளியேற்றம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அவர் என்ன காரணத்திற்காக வெளியில் அனுப்பப்பட்டார் என்ற குழப்பம் அவர்களிடையே ஏற்பட்டது

காரணம் கேட்டு அழுது புலம்பிய போட்டியாளர்களிடம், ‘வரும் சனிக்கிழமை சரவணன் வெளியேற்றத்திற்கான காரணம் தெரிய வரும்’ என பிக் பாஸ் உறுதியளித்தார். இதனால் போட்டியாளர்களோடு மக்களும் சேர்ந்து கமல் என்ன காரணம் சொல்வார் என ஆர்வமாகக் காத்திருந்தனர்.

வழக்கம் போல் இந்த வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அகம் டிவி வழியே போட்டியாளர்களுடன் பேசினார் கமல். ஆனால், அப்போது அவரிடம் போட்டியாளர்களும் சரவணன் பற்றிக் கேட்கவில்லை. அவரும் அதுபற்றி பேசவில்லை. இதனால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கமலை ஒருமையில் பேசியதால் தான் சரவணன் வெளியேற்றப் பட்டார் என்ற அனுமானம் மக்களிடையே உள்ளது. எனவே, அது பற்றி கமல் ஏதாவது விளக்கம் தருவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் முந்தைய சீசன்களில் நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேறிய பரணி, ஓவியா போன்ற போட்டியாளர்கள், வார இறுதி நாட்களில் கமல் முன்னிலையில் மேடையில் தோன்றினர்.

அப்போது தங்களது பக்க நியாயத்தை எடுத்துக் கூற அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால், சரவணன் விவகாரத்தில் அப்படி பிக் பாஸ் நடந்து கொள்ளவில்லை. இதனால் தொடர்ந்து பிக் பாஸ் சரவணனை அவமானப் படுத்துவதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். கமலும் இந்த விவகாரத்தில் இப்படி அமைதியாக இருந்து விட்டாரே என அவர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.