அட கஸ்தூரியை விடுங்க நேற்று பிக் பாஸ்ல சாண்டியை யாராவது கவனித்தீர்களா? – தீயாக பரவும் புகைப்படம்.!நேத்து பிக் பாஸ் வீட்டில் சாண்டி அருகில் எழுதப்பட்டு இருந்த பெயரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி அரையிறுதியை நெருங்கி வருகிறது. அதாவது 50-வது நாளை நெருங்குகிறது.

நேற்று தான் வைல் கார்ட் என்ட்ரியில் கஸ்தூரி உள்ளே அனுப்பப்பட்டு இருந்தார். நேற்றைய எபிசோடில் சாண்டி கார்டன் ஏரியாவில் அமர்ந்திருந்த போது அவருக்கு பக்கத்தில் லாலா என்ற பெயர் எழுதப்பட்டு ஒரு ஹார்ட்டும் வரையப்பட்டு இருந்தது.

லாலா என்பது அவருடைய மகளின் பெயர் தான். இது அவர் தன்னுடைய மகளை எவ்வளவு மிஸ் செய்கிறார் என்பதை தான் உணர்த்துகிறது.

இந்த புகைப்படம் தான் தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.