இந்த வயதில் இதெல்லாம் தேவையா என்று சமந்தா தன் மாமனார் நாகர்ஜுனாவிடம் கேட்டுள்ளார்.

பாடகி சின்மயியின் கணவர் ராகுல் ரவீந்திரன் நாகர்ஜுனா, ரகுல் ப்ரித் சிங் உள்ளிட்டோரை வைத்து இயக்கிய மன்மதுடு 2 தெலுங்கு படம் இன்று ரிலீஸாகியுள்ளது.

படத்தை பார்த்தவர்கள் நன்றாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். 59 வயதாகும் நாகர்ஜுனா இந்த படத்தில் பிளேபாயாக நடித்துள்ளார்.

மன்மதுடு 2 ட்ரெய்லரில் நாகர்ஜுனா தன் மகள் வயது நடிகைகளுடன் செய்த லீலைகளை பார்த்து ரசிகர்கள் மட்டும் அல்ல அவரின் குடும்பத்தாரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மன்மதுடு 2 ட்ரெய்லர் என் குடும்பத்தாருக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை என்று நாகர்ஜுனாவே தெரிவித்துள்ளார். மருமகள் வந்த பிறகு நடிக்கும் படமா இது என்று சமூக வலைதளங்களில் நாகர்ஜுனாவை நெட்டிசன்கள் விளாசினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மன்மதுடு 2 ட்ரெய்லரை பார்த்து சமந்தா அதிருப்தி அடைந்தார். இந்த வயதில் ஏன் இப்படி ஒரு படத்தில் நடிக்கிறீர்கள் என்பதற்கு விளக்கம் கொடுக்க வேண்டும் என்று சமந்தா என்னிடம் கேட்டார். ஆனால் ட்ரெய்லரை மீண்டும் பார்த்த பிறகு அவர் தனது மனதை மாற்றிக் கொண்டுள்ளார் என நாகர்ஜுனா தெரிவித்துள்ளார்.

59 வயதில் மாமனார் நாகர்ஜுனா பிளேபாயாக நடிப்பது செட்டாகாது என்று நினைத்துள்ளார் சமந்தா. ஆனால் ரசிகர்கள் நாகர்ஜுனாவின் பிளேபாய் கதாபாத்திரத்தை ஏற்றுக் கொண்டுள்ளனர். நாகர்ஜுனாவுடன் நெருக்கமாக நடித்த கீர்த்தி சுரேஷை ரசிகர்கள் விளாசினார்கள். மன்மதுடு 2 படத்தில் கீர்த்தி சுரேஷ் மட்டும் அல்ல சமந்தாவும் கவுரவத் தோற்றத்தில் நடித்துள்ளார்.

மகள் வயது ரகுல் ப்ரீத் சிங்குடன் நாகர்ஜுனா ரொமான்ஸ் செய்தது விமர்சனத்திற்குள்ளானது. ஆனால் அவரோ தன்னை விட சின்னப் பெண்ணுடன் சேர்ந்து நடித்ததில் தவறு எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளார். ஹிட் கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் நாகர்ஜுனா உள்ளார். இந்த நிலையில் இன்று வெளியாகியுள்ள மன்மதுடு 2 படம் அவருக்கு மிகவும் முக்கியமானது ஆகும்.