விஜய்டிவியில் ஒளிபரப்பான ராஜராணி சீரியல் மூலம் பிரபலமானவர் தான் நடிகை ஸ்ரீதேவி. தற்போது ராஜாராணி சீரியல் முடிந்துவிட்டதால், எந்த ஒரு சீரியலிலும் கமிட் ஆகாமல் இருக்கிறார்.

இதனால் அவரிடம் அடுத்த புராஜக்ட் என்ன? உங்களின் திருமணம் வாழ்க்கை குறித்து பிரபல ஊடகம் பேட்டி எடுத்துள்ளது.

அதில், நான் ராஜாராணி டீமை மிகவும் மிஸ் செய்கிறேன். இப்போதைக்கு நான் எந்த ஒரு சீரியலிலும் கமிட் ஆகவில்லை, உண்மையை சொல்ல வேண்டுமென்றால், இப்போது தான் என்னுடைய உண்மையான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

தன் கணவர் அசோக்கைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால், அவரை 2017-ஆம் ஆண்டு தான் சந்தித்தேன், நான் டாக் ரெஸ்கியூவில் இருந்ததால், ஒரு நாய்க் குட்டியைத் தத்தெடுக்க யாருமே வரவில்லை, இதனால் அது குறித்து பேஸ்புக்கில் போட்டேன்.

அப்போ பெங்களூரில் இருந்தேன். இவர்தான் நாய்குட்டியைத் தத்தெடுக்க உதவி செய்தார். அப்படி தான் இருவரும் நண்பர் ஆனோம். அதன் பின் அவர் அம்மா-அப்பாவை கூப்பிட்டு வந்து பெண் கேட்டார்.

எங்கள் திருமணம் பெங்களூரில் நடந்ததால், நாங்கள் ஏதோ ரகசிய திருமணம் செய்து கொண்டோம் என்றெல்லாம் செய்தி பரவியது, அதன் பின்பு தான் சென்னையில் ஒரு ரிஷப்சனை வைத்தோம்.

இவரைத் தொடர்ந்து அசோக் கூறுகையில், நான் ஐ.டி பையன் நேரத்திற்கு வேலைக்கு போய்ட்டு, நேரத்திற்கு வந்துவிடுவேன், ஆனான் மேடம் பயங்கர பிசி, இருந்தாலும், அவங்களுடைய சூழ்நிலை மற்றும் நேரத்தை புரிந்து கொண்டதால், நாங்கள் இருவரும் ஒன்றாக இருக்கிறோம்.

இவருக்கென்று ஒரு ரசிகர் கூட்டமே இருக்கிறதே என்று அசோக்கிடம் கேட்ட போது, அதை ஏன் கேட்குறீங்க? ஐ லவ் யூ அர்ச்சனா அண்ணினு ஒரு நாளைக்கு 100 மெசேஜ் மேல வரும். அதை அவங்க ரோலுக்குக் கொடுக்கிற மரியாதையாத்தான் பார்ப்பேன் என்று கூறினார்.

ஆனால் ஸ்ரீதேவியோ அந்த மெசேஜை எல்லாம் அவர் தான் நீக்குவார் என்று சிரித்துக் கொண்டே முடித்தார்.