முக்கிய நடிகரை கொக்கி போடும் ஹன்சிகா :இது சிம்புவிற்கு தெரியுமா குலேபகாவலி படத்தை இயக்கிய கல்யாணின் புதுப்படத்தில் ஹன்சிகா மீண்டும் நடிக்கிறார்.

ஜோதிகா, ரேவதி, யோகி பாபு, ஆனந்த் ராஜ் உள்ளிட்டோரை வைத்து ஜாக்பாட் படத்தை இயக்கிய கல்யாண் அடுத்த பட வேலையில் இறங்கிவிட்டார். இன்னும் பெயர் வைக்கப்படாத அந்த படமும் காமெடியாக இருக்குமாம்.

அந்த காமெடி படத்தின் ஹீரோயினாக ஹன்சிகாவை ஒப்பந்தம் செய்துள்ளார் கல்யாண். ஹன்சிகா ஏற்கனவே கல்யாண் இயக்கத்தில் பிரபுதேவா ஜோடியாக குலேபகாவலி படத்தில் நடித்துள்ளார்.

கல்யாண் படத்தில் ரம்யா கிருஷ்ணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். முன்னதாக கடந்த 2015ம் ஆண்டு வெளியான விஷாலின் ஆம்பள படத்தில் ரம்யா கிருஷ்ணனும், ஹன்சிகாவும் சேர்ந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹன்சிகா யு.ஆர். ஜமீல் இயக்கத்தில் மஹா படத்தில் நடித்துள்ளார். இது அவரின் 50வது படமாகும். மஹா பட போஸ்டர்களாலேயே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் முன்னாள் காதலர்களான சிம்புவும், ஹன்சிகாவும் மஹா படத்தில் காதலர்களாக நடித்துள்ளதால் அதை பார்க்கவே ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

ஹன்சிகா தற்போது தெனாலி ராமகிருஷ்ணா பி.ஏ. பி.எல். என்கிற தெலுங்கு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இது தவிர ஆதி ஜோடியாக பார்ட்னர் படத்திலும் நடித்து வருகிறார்.

புதுமுகம் மனோ தாமோதரன் இயக்கி வரும் பார்ட்னர் படம் மனம் விட்டு சிரித்து பார்க்கும் வகையில் செம காமெடியாக இருக்குமாம். பார்ட்னர் படத்தில் யோகி பாபு, ரோபோ ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். படப்பிடிப்பு சென்னையில் நடந்து கொண்டிருக்கிறது. இயக்குநர் கதை சொன்ன விதம் பிடித்துப் போய் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதாக ஆதி தெரிவித்துள்ளார்.