வெளியானது உலகின் டாப் 10 பணக்காரர்களின் பட்டியல் யார் முதலிடம் தெரியுமா லிஸ்ட் உள்ளே உலகின் பணக்காரர்களின் பட்டியலை அமெரிக்காவின் புளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

நியூயார்க்கைச் சேர்ந்த புளூம்பெர்க் என்கிற நிறுவனம், மின்னணு தகவல் மற்றும் ஊடகம் தொடர்பான ஒரு தனியார் நிறுவனம்.

இந்த நிறுவனம் உலகின் மிகப்பெரிய 500 பணக்காரர்களின் பட்டியலை தினந்தோறும் வெளியிட்டு வருகிறது.

குறித்த நிறுவனம் எதன் அடிப்படையில் பணக்காரர்களின் பட்டியலை வெளியிடுகிறது என்றால், ஒவ்வொரு பணக்காரரின் சுயவிவரப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள நிகர வர்த்தக மதிப்பு மற்றும் நியூயார்க்கில் ஒவ்வொரு வர்த்தக நாளின் முடிவிலும் குறிப்பிடப்படும் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் தரவரிசைப்பட்டியலை வெளியிடுகிறது.

அதன்படி, உலக பணக்காரர்களின் தரவரிசைப் பட்டியலில் அமேசான் நிறுவனர் ஜெப் பெஜோஸ் 114 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடத்திலும், இவருக்கு அடுத்து, முதலிடத்தில் இருந்து மெல்ல 3-வது இடத்துக்கு சரிந்த மைக்ரோ சாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், கடந்த இரண்டு வாரங்களுக்குள் 106 பில்லியன் டொலர் மதிப்புடன் மீண்டும் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

இவருக்கு அடுத்து எல்.வி.எம்.எச் மோயித் வுட்டன் சே என்கிற உலகின் மிகப்பெரிய ஆடம்பர பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தின் தலைவர் பெர்னாட் அர்னால்ட் மூன்றாவது இடத்தையும் பெர்க்‌ஷைர் ஹாத்வே என்ற முதலீட்டு நிறுவனத்தின் தலைவர் வாரன் பாப்ட் 4-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

இவர்களுக்கு அடுத்து பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் 73.9 பில்லியன் டொலருடன் 5-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

இந்த உலக பணக்காரர்களின் பட்டியலில் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி 18-வது இடத்தில் உள்ளார்.