போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை படம் உலகம் முழுக்க நாளை மறுநாள் ஆகஸ்ட் 08 ல் வெளியாகவுள்ளது.

இதற்காக இன்று சிங்கப்பூரில் பிரிமியர் காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதே போல சென்னையிலும் இந்த காட்சி பத்திரிக்கையாளர்களுக்கு அமைக்கப்பட்டிருந்தது.

படத்திற்கு நல்ல விமர்சனங்களும், வரவேற்பும் கிடைத்துள்ளது.படம் வெளியாக இன்னும் நாட்கள் இருக்கும் நிலையில் இணையதளத்தில் சட்டவிரோதமாக படத்தை வெளியிட்டதாக தகவல் கசிந்துள்ளது.

இதனால் அஜித் ரசிகர்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.