உலகக்கோப்பை குறித்து சரியாக ஜோதிடம் கணித்த ஜோதிடர் பாலாஜிஹாசன் தான் இணையத்தில் இன்றைய வைரல் செய்தியாக இருக்கிறார்.

உலகக்கோப்பையிலிருந்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஓய்வு வரையிலும் அனைத்தையும் சரியாக கணித்து கூறினார் பாலாஜிஹாசன்..

இந்நிலையில், வருகிற தேர்தலில் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்பாரா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ள பாலாஜிஹாசன் உள்ளாட்சி தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் தான் வெற்றி பெரும் என்றும், மேலும் முக.ஸ்டாலின் அவர்கள் முதல்வராக பதவி ஏற்பார் என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில் தற்போது மீண்டும் பிரபல தொலைக்காட்சியில், சசிகலா முன்கூட்டியே சிறையில் இருந்து வெளிவர வாய்ப்பு உள்ளதா என ஜோதிடர் பாலாஜியிடம் கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த ஜோதிடர், எனது கணிப்பின்படி இந்தவருட டிசம்பரில் இருந்து 2020 மார்ச் மாதத்திற்குள் சசிகலா வெளியேவருவார், அவர் வெளியே வந்தவுடன் அதிமுகவை இணைத்து, சிலரை நீக்கிவிட்டு கட்சியை தொடர்வார் எனவும், அதில் டிடிவி தினகரன் முக்கிய பொறுப்பு வகிப்பார் எனவும் ஜோதிடர் பாலாஜி கூறினார்.

இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் மகிழ்ச்சியில் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.