லாஸ்லியவும் கவீனை காதலிக்க ஆரம்பிச்சுட்டா ஆதாரத்தோடு மதுமிதாவுக்கு பதில் கொடுத்த சித்தப்பு பிக்பாஸ் வீட்டில் நேற்றைய எபிசோடில் ஷாக்சி, கவீனுக்கு கொஞ்சம் கூட என்னை பற்றிய பீலிங் இல்லை என்று மிகப் பெரிய பிரச்சனையை உண்டாக்கினார்.

அதுமட்டுமின்றி நான் கவலைப்படுவேன் என்று தெரிந்தும், லாஸ்லியாவோட கையை பிடிப்பது, காலை பிடிப்பது என்று இருக்கிறான்.

எனக்கும் மனசு இருக்கிறது என்று கதறி அழுதார். இதனால் லாஸ்லியா என்னிடம் யாரும் பேச வேண்டாம் என்று கவீனை மறைமுகமாக கூறிவிட்டு பாத்ரூமிற்குள் சென்று அழுதார்.

இதற்கிடையில் சித்தப்பு சரவணன் மதுமிதாவிடம், நான் கவீனை 5 தினங்களுக்கு முன்பு எச்சரித்தேன், இது பெரிய பிரச்சனையில் வந்து நிற்கும் என்று எனக்கு தெரியும், 2 தினங்களாக கேட்கவில்ல, கடந்த 3 தினங்களாக தான் கேட்கிறான்.

எனக்கு முன்பே தெரியும் இது போன்ற பிரச்சனை வரும் என்று, கவீன் பையன் சும்மா இருந்தாலும், அந்த லாஸ்லியா சும்மா இல்லை, அவன் என்ன டிரஸ் போடுறானோ அதையே தேடி போட்டு, மேட்சிங், மேட்சிங்காக இருந்தா, நீ வேணா கமெரால பாரு தெரியும் என்றார்.

உடனே அங்கிருந்த ரேஷ்மா ஆமாம், ஷாக்சி மற்றும் லாஸ்லியா இரண்டு பேருக்குமே கவீன் மேல் ஒரு பீலிங் இருக்கு என்று கூறினார்.