பிரபல நடிகை லட்சுமி மற்றும் அவரது கணவர் சிவச்சந்திரன் ஆகியோரின் பரிந்துரையினால் நடிகராக உருவானவர் சரவணன். பள்ளிப் பருவத்திலேயே பிற கலைஞர்களைப் போல் பேசி நடிக்கும் திறமை பெற்றிருந்தவர். திரைப்படத் துறையில் முதன்முதலாக சிவச்சந்திரனுக்கு உதவியாளராக நுழைந்தார். பின்னர் நடிகை லட்சுமியின் பரிந்துரையின் பேரில் திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து பயின்றார்.

நடிகர் சக்தி குமார் இவரது கல்லூரித் தோழர். இவருடன் கல்லூரியில் பயின்ற சூரியஸ்ரீ என்ற மாணவியே இவரது வாழ்க்கைத் துணைவியாக அமைந்துள்ளார். இத்தம்பதிக்குக் குழந்தைகள் இல்லாததால் முதல் மனைவியின் சம்மதத்துடன் இரண்டாவதாக ஒரு திருமணம் செய்துள்ளார். இவர்கட்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. 2003-ஆம் ஆண்டில் இவருக்குத் திருமணம் நடைபெற்றது. மனைவி தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர்.

Third party image reference

சேலம், அரசுக் கலைக் கல்லூரியில் பி.ஏ., தமிழ் இலக்கியம் பயின்றவர் இவர் கவிதை எழுதும் ஆற்றல் உள்ளவர். சேலத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவரது தந்தை காவல் துறையில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றியவர். தாயார் செவிலியராக பணியாற்றியவர். பெற்றோருக்கு ஐந்து குழந்தைகள். அவர்களில் இரண்டாவது மகன் இவர்.

1991-ஆம் ஆண்டு வைகாசி வந்தாச்சு என்ற படத்தில் அறிமுகமான சரவணன் தொடர்ந்து பொண்டாட்டி ராஜ்ஜியம், அபிராமி, மாமியார் வீடு, பெற்றெடுத்த பிள்ளை, நல்லதே நடக்கணும் உள்ளிட்ட 25- படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது. 1998ஆம் ஆண்டு வரை கதாநாயகனாகவே நடித்துள்ள இவர் தாயுமனவன் என்ற படத்தையும் இயக்கியுள்ளார் .

அதன் பின் அடுத்த சுற்றில் 2007 ஆம் ஆண்டு வெளியான ‘பருத்தி வீரன்’ படத்தில் கார்த்தியின் சித்தப்பாவாக செவ்வாழை என்ற கதாபாத்திரத்தில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்து பெரும் பெயர் பெற்றார். இதற்காக பிலிம்ஃபேர், விஜய் விருதுகள் இவருக்குக் கிடைக்கப்பெற்றன. தற்போதும் இவர் நடித்து வருகிறார். விஜய் தொலைக்காட்சியில் இவ்வாண்டில் நடைபெற்று வரும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் இவர் பங்கெடுத்து வருகிறார்.