விஜய் சேதுபதி கூறியதால் தான் நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றேன் மனம் திறந்த சேரன்
பிக்பாஸ் வீட்டில் மொட்ட கடிதாசி டாஸ்க்கில் போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்கும், சில கேள்விகளை போட்டியாளர்கள் முன் வைத்தனர்.

அதன் சரவணன், சேரனுக்கு எழுதிய மொட்டக் கடிதாசியில், நீங்கள் திரையுலகில் சாதித்துவிட்டீர்கள், புகழ், விருதுகளை எல்லாம் வாங்கிவிட்டீர்கள், அதன் பின் ஏன் நீங்கள் பிக்பாஸ் வீட்டிற்கு வந்தீர்கள் என்ன காரணம் என்று எழுதியிருந்தார்.

இதற்கு சேரன் நான் பிக்பாஸ் வீட்டிற்கு வருவதற்கு முக்கிய காரணமே விஜய் சேதுபதி தான், ஏனெனில் நான் இயக்குனராக வெற்றியை சந்தித்த படம் என்றால் அது ஆட்டோகிராப் தான், அதன் பின் நான் எந்த ஒரு வெற்றியையும் அந்தளவிற்கு தகக வைக்கவில்லை.

இதனால் நான் அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கிறேன். அப்போது தான் இது போன்ற வாய்ப்பு வந்தது, இது குறித்து விஜய்சேதுபதியிடம் கேட்ட போது, சார் நீங்கள் போங்க, ஆட்டோகிராப் படத்திற்கு பின் உங்களுக்கு ஒரு பேம் வரவில்லை.

கடந்த நான்கு ஆண்டுகளாக மக்கள் உங்களை மறந்திருப்பார்கள், அதனால் நீங்கள் இந்த நிகழ்ச்சியில் சென்றால், மக்களுக்கு உங்களை தெரியவரும், அதன் பின் உங்களுடைய அனுபவங்களை எல்லாம் அங்கே பகிருங்கள், இது மற்றவர்களுக்கு உதவும் என்று கூறினார்.

அதுவே ஒரு முக்கிய காரணம் என்று சேரன் முடித்தார்.