Man vs Wild என்ற உலகம் முழுவதும் பிரபலமான டிஸ்கவரி தொலைக்காட்சி தொடரான நிகழ்ச்சியில் நமது இந்திய நாட்டு பிரதமர் மோடி கலந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சிகான அதிரடி டிரைலர் வெளியாகி பலரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளது என்று தான் கூற வேண்டும். இதற்கான ட்ரெய்லரை பியர் கிரில்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு வெளியிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபருக்கு அடுத்து நம்ம அதிபர்:-

Third party image reference

முன்னர் அமெரிக்க அதிபராக இருந்த ஒபாமாவும் இந்த நிகழ்ச்சியில் ஒரு பகுதியில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனது பதிவு பிடித்தால் “தமிழால் இணைவோம்” Follow செய்து, ஒரு லைக், ஒரு ஷேர் செய்யுங்கள்! அதுவே நீங்கள் எனக்கு ஊக்கம் அளிக்கும் டானிக் தோழா!

யார் அந்த பியர் கிரில்ஸ்?

Third party image reference

டிஸ்கவரி தொலைக்காட்சியில் வரும் பிரபலமான Man vs Wild நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பியர் கிரில்ஸ்-ம் உலக அளவில் புகழ் பெற்றவர். மனிதர்கள் யாரும் செல்லாத அடர்ந்த காட்டுக்குள் சென்று அங்கு பயணம் செய்வது, கடும் வறட்சி உள்ள பாலைவனத்தில் நடப்பது, மிக உயரத்தில் இருந்து தண்ணீரில் குதிப்பது என்று அவரின் சாகசம் அனைவரையும் பிரமிக்க வைக்கும்.

68வயதிலும் கெத்து காட்டும் பிரதமர்:-

Third party image reference

68 வயதான நமது பிரதமர் அசால்ட்டாக பியர் கிரில்ஸ்சுடன் காடு, ஆறு, மலைகள் என தொடர்ந்து செல்கிறார் சிறு தயக்கம், தடுமாற்றம், பயம் இன்றி. இவ்வளவு மன உறுதி கொண்டவர் நம் பிரதமர் என்பதில் நாம் மிகுந்த மகிழ்ச்சி கொள்ள வேண்டும்.

டிஸ்கவரி பற்றி சொல்லவா வேண்டும்?

விலங்குகள் பற்றி நாம் பிறந்தது முதல் தெள்ள தெளிவாக இன்று வரை நமக்கு விளக்கும் ஒரே பரிச்சயமான சேனல் என்றால் அது டிஸ்கவரி தொலைக்காட்சி தான்.

அதில் ஒளிபரப்பாகும் Man vs Wild என்ற உலக அளவில் மிக பிரபலமான நிகழ்ச்சியில் நமது இந்திய நாட்டு பிரதமர் மோடி முதன் முதலாக பங்கேற்றுள்ளார். இக்கட்டான சூழலில் எப்படி உயர் பிழைப்பது என்பதை நமக்கு கற்று கொடுக்கும் பியர் கிரில்ஸ் உடன் தான் மோடி தற்போது இணைந்து காட்டுப் பகுதியில் பல சாகச பயணங்களை மேற்கொள்ளும் முன்னோட்ட வீடியோ தற்போது அதிரடியாக வெளியாகி படு வைரலாகியுள்ளது.

எதற்கு இந்த பயணம்?

இந்த அருமையான நிகழ்ச்சியின் மூலம், நாம் காட்டுக்குள் வன விலங்குகளின் தன்மை என்ன? என்பது குறித்தும், காட்டில் இக்கட்டான சூழலில் நாம் மாட்டிக் கொண்டால் மனிதர்கள் எவ்வாறு தப்பிப்பது எப்படி? என்பது பற்றியும் அப்பகுதிகளுக்குச் சென்று விளக்கம் அளிப்பார்.

180 நாடுகள் காண உள்ளது?

இதில், சுமார் 180 நாடுகளை சேர்ந்த மக்களுக்கு நமது இந்திய நாட்டு பிரதமர் மோடி குறித்து தெரியப்போகிறது. உலகில் உள்ள விலங்குகளின் பாதுகாப்பு மற்றும் நமது உலக சுற்றுச்சூழல் மாற்றம் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வனப்பகுதிக்கு சென்றுள்ளார்.

எப்போது ஒளிபரப்பு?

இந்த நிகழ்ச்சி வருகின்ற ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி சரியாக இரவு 9 மணிக்கு டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பப்படும்’ என அவர் பதிவிட்டுள்ளார். இதற்கிடையே நமது பிரதமர் மோடி ஒரு நேர்காணலின் போது, 5 நாட்கள் தான் காட்டில் தனியாக இருந்ததாக அப்போதே கூறியிருந்தது எனபதும் குறிப்பிடத்தக்கது.