கடைசி போட்டியிலும் டீ சர்ட்டால் ஏற்பட்ட உச்சகட்ட சர்ச்சை உடன் வெளியேறிய மலிங்கா இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்காவின் கடைசி போட்டியின் போது, அவரது மகன் அணிந்திருந்த உடை தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி, தற்போது ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில் நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியோடு யார்க்கர் மன்னர் மலிங்கா ஓய்வு பெறப்போவதாக அறிவித்தார்.

இதனால் அவரின் கடைசி போட்டியை பார்ப்பதற்காக மலிங்காவி குடும்பத்தினர் மைதானத்திற்கு வருகை தந்திருந்தனர்

அதில், மலிங்கா, மனைவி, மகள் மற்றும் மகன் இருந்தனர். அப்போது மலிங்காவின் மகன் மும்பை இந்தியன்ஸ் டீ சர்ட் அணிந்திருந்தார். இதனால் இதைக் கண்ட இணையவாசிகள் மும்பை இந்தியன்ஸ் எவ்வளவு பெரிய குடும்பம் என்று இப்போது தெரிகிறதா? என்று கமெண்ட் செய்து வர, இலங்கை ரசிகர்கள் சிலர் அப்போ அவருக்கு இலங்கை அணி பிடிக்காதா? ஏன் அந்த டீ சர்ட் போட்டிருக்கலாம் தானே என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும் மலிங்கா ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது