முதல் முறையாக வெளியான மலிங்காவின் மனைவி மற்றும் குழந்தைகள் புகைப்படம் வைரல் இலங்கை வீரர் லசித் மலிங்கா மைதானத்தில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் நெகிழ்ச்சியுடன் எடுத்து கொண்ட புகைப்படம் வைரலாகியுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் ஜாம்பவானான வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா நேற்று நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியுடன் ஓய்வு பெற்றார்.

இப்போட்டியில் மலிங்கா 3 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.

மலிங்கா விளையாடும் கடைசி போட்டி இது என்பதால் அவர் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளும் போட்டி நடைபெற்ற கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்துக்கு வந்திருந்தனர்.

போட்டிக்கு பின்னர் அவர்கள் நான்கு பேரும் குடும்பமாக ஒரு புகைப்படத்தை எடுத்து கொண்டனர்.

இந்த புகைப்படத்தை ஐசிசி டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் 25000 லைக்குகளை பெற்று வைரலாகியுள்ளது.