ஆந்திராவில் புதிய முதல்வராக பதவியேற்றத்திலிருந்து ஜெகன் மோகன் ரெட்டி அடுத்தடுத்து அதிரடி திட்டங்களை ஆந்திர மக்களுக்கு கொண்டு வந்து அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறார்.

ஜெகன் மோகன் ரெட்டி வாரத்தில் ஒரு அதிரடி திட்டத்தை கொண்டு வந்து, இந்திய அளவில் பெரிதும் பேசப்படும் அளவிற்கு அவரது திட்டங்கள் இருக்கின்றனர். ஜெகன் மோகன் இந்த அதிரடி திட்டங்களால் எதிர்க்கட்சி தலைவரான சந்திர பாபு நாய்டு சற்று ஆடிப்போவிட்டார் என்றே கூறலாம். ஜெகன் மோகன் ரெட்டி தான் கொடுத்த வாக்கை தவறாமல் நிறைவேற்றி வருகிறார்.

தற்போது என்னவென்றால் ஆந்திராவில் உள்ள கார்ப்ரெட் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஐடி நிறுவனங்கள் எல்லா தனியார் நிறுவனங்களும் இனி 75 % வேலை ஆந்திர மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்று அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

இதன் மூலம் ஆந்திர மக்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். இனி ஆந்திர மாநிலத்தில் வேலை இல்லா திண்டாட்டம் என்று எதும் இருக்காது என்றே கூறலாம்