அஜித்துக்கு இதை மட்டும் செய்தால் பிடிக்கவே பிடிக்காதாம் அது என்ன தெரியுமா அஜித் தமிழ் சினிமாவின் தல என்று செல்லமாக அழைக்கப்படுபவர். இவர் படம் வெற்றி, தோல்வி தாண்டி இவருக்கான ஓப்பனிங் என்பது பல நடிகர்களுக்கு கனவு தான்.

அந்த வகையில் அஜித் நடிப்பில் இன்னும் சில வாரத்தில் நேர்கொண்ட பார்வை படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் மீது பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்து வருகின்றது.

இந்நிலையில் அஜித் யாருக்கு ஏதும் உதவி செய்தால், அவர்களிடம் இதை நான் செய்தேன் என்று வெளியே சொல்லக்கூடாது என்று கடுமையான கண்டிப்பு காட்டுவாராம்.

அதையும் மீறி அவர் மீது கொண்ட அன்பால் தான் இந்த விஷயங்கள் வெளியே வருவதாம், மேலும், ஒரு உதவியை செய்யும் வரை தான் அஜித் அதை பற்றி தெரிந்துக்கொள்வாராம்.

அவருக்கு நன்றாக ஆகிவிட்டது, அவர்களின் தேவை முடிந்துவிட்டது என்றால், இனி இது உங்கள் வாழ்க்கை நீங்கள் தான் வாழ வேண்டும் என்று கூறிவிட்டு சென்றுவிடுவாராம்.