கமல் மற்றும் விஜயின் அரசியல் வருகை குறித்து பாலாஜியின் அடுத்த குண்டு விஜய் அரசியலுக்கு வரமாட்டார். கமலுக்கு 5 வருடங்களுக்கு வளர்ச்சியே இருக்காது என ஜோதிடர் பாலாஜி ஹாசன் தெரிவித்தார்.

கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு பிறகு அரசியலில் இருக்கும் வரை இருவரும் அசைக்க முடியாத சக்திகளாக விளங்கினர். இரட்டை இலை துளிர்த்தும், உதயசூரியன் உதித்ததும் இவர்களால்தான் என்பது யாராலும் மறுக்க முடியாது.

இந்த நிலையில் எதிர்பாராதவிதமாக இருவரும் தற்போது உயிருடன் இல்லை. இதனால் மக்கள் செல்வாக்கை கவர திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக, பாமக என போட்டி போட்டு வருகிறார்கள். இந்த ரேஸில் தற்போது நடிகர்கள் கமல்ஹாசன், சீமான் உள்ளிட்டோர் இணைந்துள்ளனர்.

இதில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்திருந்த போதிலும் அவர் இன்னும் அரசியல் கட்சியையே தொடங்கவில்லை. அது போல் நடிகர் விஜய்யை அவரது தந்தையும் ரசிகர்களும் அரசியலுக்கு வர அழைக்கின்றனர். ஆனால் அவரோ இன்னும் பிடி கொடுக்கவில்லை.

அது போல் அஜித். இவர் தனது படங்களில் கூட அரசியல் சாயம் வந்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பார். தான் அரசியலுக்கு வரமாட்டேன் என்பதை தெளிவாக கூறிவிட்டார். இதைத் தொடர்ந்து சிம்பு, இவரது தந்தை டி ராஜேந்தர் அரசியலில் சோபிக்க முடியாததால் மகன் மூலம் அதை சாதிக்கலாம் ென நினைத்து அவ்வப்போது பில்டப் கொடுக்கிறார்.

ஆனால் அவரும் வந்தபாடில்லை. கமல்ஹாசன் அரசியலுக்கு வந்து மக்களவை தேர்தலில் போட்டியிட்டு 15 லட்சம் வாக்குகளை அள்ளிக் குவித்தார்.தேர்தலில் தோல்வி அடைந்த போதிலும் இது பெரும் சாதனைதான் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

இந்த நிலையில் ரஜினி, விஜய், அஜித் ஆகியோரின் ரசிகர்கள் எப்போது அரசியலுக்கு வருவார்கள் என காத்து கொண்டிருக்கிறார்கள். இதுகுறித்து சேலம் ஜோதிடர் பாலாஜி ஹாசன் தனியார் தொலைகாட்சிகளுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் அவர் கூறுகையில் ரஜினிகாந்துக்கு அரசியலில் மக்கள் ஆதரவு இருக்காது. கமலுக்கு அரசியலில் இன்னும் 4, 5 ஆண்டுகளுக்கு பெரிய வளர்ச்சிக்கு இல்லை. எனினும் தவறுகளை சுட்டிக் காட்டும் நபராக இருப்பார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்.பாமகவுக்கு நல்ல எதிர்காலம் உண்டு. விஜய் அரசியலுக்கு வரமாட்டார். ஆனால் 2020, 2021-ஆம் ஆண்டுகளில் விஜய்க்கு திரைப்பட துறையில் நல்ல முன்னேற்றம் உள்ளது. அது போல் அஜித்தும் அரசியலுக்கு வரமாட்டார். ஆனால் அவர் சர்வதேச படங்களை கொடுப்பார் என பாலாஜி ஹாசன் தெரிவித்துள்ளார்.