உன்னுடைய உள்ளாடை என்ன கலர் அணிந்திருக்கிறீங்கன்னு கேட்கிறார் இயக்குநர் நடிகை கூறிய அதிர்ச்சி தகவல் பிரபல பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹாரை விளாசியுள்ளார் நடிகை கங்கனா ரனாவத்.

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கபில் சர்மா தொகுத்து வழங்கும் தி கபில் சர்மா தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். உங்களை இந்தியாவின் பிரதமராக நியமித்தால் யார், யாருக்கு எந்த துறை ஒதுக்குவீர்கள் என்று கபில் சர்மா கங்கனாவிடம் கேட்டார்.

அதற்கு அவர் சுவாரஸ்யமான பதில் அளித்துள்ளார். கபில் சர்மாவிடம் கங்கனா கூறியதாவது,

நடிகர் அக்ஷய் குமாருக்கு தான் சுகாதாரத் துறையை ஒதுக்குவேன். ஏனென்றால் அவர் மது அருந்த மாட்டார், புகைப்பிடிக்க மாட்டார். பார்ட்டிகளுக்கு சென்றால் இரவு 9.30 மணிக்கு கிளம்பிவிடுவார். சரியாக 10 மணிக்கு தூங்கும் பழக்கம் உள்ளவர் அக்ஷய்.

நடிகை கரீனா கபூருக்கு உள்துறை அமைச்சகத்தை கொடுக்கலாம். அவர் வீட்டையும் கவனித்துக் கொண்டு, கெரியரிலும் கவனம் செலுத்துகிறார். ஷாருக்கானுக்கு தான் நிதி அமைச்சகம் கொடுக்கப்பட வேண்டும். அவர் சொந்தமாக ஸ்டுடியோ வைத்துள்ளார். பணக்கார பாலிவுட் நடிகர்களில் ஒருவர் ஷாருக். அதனால் நிதித் துறையை அவர் நிச்சயம் நல்லபடி பார்த்துக் கொள்வார்.

தகவல் மற்றும் ஒளிபரப்பு துறையை பிரபல இயக்குநரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹாருக்கு கொடுக்க வேண்டும். ஏனென்றால் புறம் பேசுவது அவருக்கு மிகவும் பிடிக்கும். அதற்காகவே அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களிடம் நீங்கள் என்ன நிறத்தில் உள்ளாடை அணிந்திருக்கிறீர்கள், அடுத்த பெண்ணுடன் படுக்கையில் இருப்பதை உங்களின் மனைவி பார்த்துவிட்டால் என்ன செய்வீர்கள் என்றெல்லாம் கேட்கிறார். அதனால் அவரை தவிர வேறு யாராலும் இந்த துறையை நன்றாக கவனிக்க முடியாது.

நடிகர் ரன்பிர் கபூருக்கு பாதுகாப்புத் துறையை ஒதுக்க வேண்டும். அவர் யாருக்கும் தெரியாமல் ஒரு பி.ஆர். குழுவை வைத்து அடுத்தவர்களின் பெயரை கெடுக்கிறார். அதாவது முதுகில் குத்துகிறார் என்றார் கங்கனா. கங்கனா, ராஜ்குமார் ராவ் நடித்துள்ள ஜட்ஜ்மென்டல் ஹை கியா படம் வரும் 26ம் தேதி வெளியாக உள்ளது. அந்த படத்தை விளம்பரம் செய்யவே கங்கனா கபில் சர்மா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.